Header Ads



பைசால் காசிம் எம்பியின் துரித முயற்சியால் விடிவு காண்கிறது நிந்தவூர் 2ம் குறுக்குத்தெரு வீதி

(சுலைமான் றாபி)

கடந்த மாதம் 25ம் திகதி எமது செய்திச் சேவையில் "நிந்தவூர் 2ஆம் குறுக்குத் தெரு வீதியின் அவலம் எப்போது நீங்கும்? நிந்தவூர் அரசியல் வாதிகளின் கவனத்திற்கு..!" எனும் தலைப்பில் சுட்டிக்காட்டப்பட்ட  செய்திக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் துரித முயற்சியால் இந்த வீதியின் புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (11.02.2014) வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த மதிப்பீட்டு நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் ஐ.எல். அமீனுல் பாரி, கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர், பொறியியலாளர்களான எம்.எம்.எம்.முபாறக், ஏ.எல்.எம்.சபீக், தொழில் நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம். நாளீர் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உதவித்தவிசாளர் ஏ.எம்.எம். அன்சார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

இதேவேளை இந்த வீதியானது வடிகானுடன் சேர்த்து கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்படும் அதேவேளை, நிந்தவூர் 1ம் குறுக்குத்தெரு வீதி மற்றும் மீரா நகர் வீதி போன்றன புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம். ஜாபிர் தெரிவித்தார். 

எது எவ்வாறாக இருந்தாலும் மக்களுக்கு ஏற்படும் குறைகளை இனங்கண்டு அவைகளை நிபர்த்தி செய்து கொடுப்பது அரசியல் வாதிகளினதும், சமூகவியலாளர்களினதும் கடமையாகும். எனவே இந்த 2ம் குறுக்குதெரு வீதி உட்பட அவல நிலையில் காணப்படும் ஏனைய வீதிகள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்படவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். 


No comments

Powered by Blogger.