Header Ads



தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 2,400 கசையடி

சவூதி அரேபியாவில் தாயின் பல்லை உடைத்த மகனுக்கு 5 ஆண்டு சிறையும், 2,400 கசையடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவூதி அரேபியாவில் இருந்து வெளிவரும் "ஓகாஜ்' நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தி:

சவுதி அரேபியாவில் தனது தாயுடன் காரில் சென்ற 30 வயது இளைஞர் தாயுடன் ஏற்பட்ட தகராறில் தாய் என்றும் பாராமல் அவரைத் தாக்கினார். இதில் தாயின் பல் உடைந்தது. சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் தாயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மகனைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 2400 கசையடியும் வழங்கித் தீர்ப்பளித்தது. மேலும், 2,400 கசையடிகளை பத்து நாள்களுக்கு ஒருமுறை பொது இடத்தில் வைத்து 40 கசையடிகளாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இவை தவிர தாயின் பல்லை உடைத்ததற்காக, மகனின் பல்லை உடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. இது தான் தாய்க்கு இஸ்லாம் கொடுத்துள்ள மதிப்பு, கௌரவம்.
    முதலில் பல்லை உடைக்க வேண்டும். அடுத்து 2400 கசையடி. அடுத்து 5 வருட சிறை.
    இதே விடயம் எமது நாட்டில் நடந்திருந்தால், .ரண்டு பேரையும் பொலிசுக்கு அழைத்து சமாதானம் பேசி அனுப்பிவிடுவார்களே.

    ReplyDelete

Powered by Blogger.