கிழக்கு மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டுக்கு பின், ஒய்வுபெற்ற அதிபர் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு
(யு.எம்.இஸ்ஹாக்)
கிழக்கு மாகாணத்தில் 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒய்வு பெற்ற அதிபர் ஆசிரியர்களை மாகாண கல்வி திணைக்களத்தினால் பாராட்டி கௌரவிக்க உள்ளதாக மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் கல்முனை வலய அதிபர்கள் மத்தியில் தெரிவித்தார்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி இந்த நாட்டில் பேசப்படுகின்ற ஒரு பாடசாலை. இப்பாடசாலையை உருவாக்கியவர்களை இன்றும் நாம் நினைவு கூறுகின்றோம். எனினும் இப்பாடசாலையின் புகளை ஓங்க செய்த ஒய்வு பெற்ற அதிபர் அல் -ஹாஜ் பஸீர் அவர்கள் ஓய்வடைந்து பல வருடங்கள் கழிந்தும் இன்னும் அவருக்கு இப்பாட சாலை ஒரு பிரியாவிடை வைபவத்தை நாடத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
இக்கல்லூரியின் தற்போததைய அதிபர் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இடமாற்றம் பெற்று செல்பவர்களுக்கு விழா எடுப்பதை விட ஒய்வு பெறுபவர்களை அவர்களது குடும்பத்துடன் அழைத்து அவர்களை கௌரவ படுத்துவதன் மூலம் அவர்களது சேவை காலத்தில் நடை பெற்ற இனிய நிகழ்வுகளை வெளி கொண்டு வந்து அவர்களது மனங்களை மகிழ்ச்சி அடைய வைக்க முடியும் என நேற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் இடம் பெற்ற வைபவத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.அப்துல் நிஸாம் தெரிவித்தார் .
Post a Comment