உலக ஊடக சுதந்திர பட்டியலில் இலங்கை 165 ஆம் இடம்
உலக ஊடக சுதந்திர வரிசைப் பட்டியலில் இலங்கை 165ம் இடத்தை வகிக்கின்றது. 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை 165ம் இடத்தை வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு அறிவித்துள்ளது. அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆண்டறிக்கையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனநாயக நாடுகளாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பல நாடுகளில் ஊடக சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகளவு ஊடக சுதந்திரம் காணப்படும் நாடாக பின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக எரித்திரியா கருதப்படுகின்றது.
உலகம் அறியாமல் அரசுக்கு கண்மூடித்தனமாக வக்காலத்து வாங்கும் எம் சகோதரர்கல் இச்செய்தியை நன்கு அறிந்திருக்க வேண்டும்.இப்படியான ஆய்வு இப்போதுதான் வெளியாகியுள்ளது,ஆனால் நாங்கள் எப்பவோ சொல்லி விட்டோம்,இலங்கையில் ஜனனாயகமில்லை என்று.அடிக்கடி ஜனனாயக சொல்லை மந்திரிக்கும் அரசியல் வாதியளுக்கு இந்த ஆய்வின் முடிவு முகத்தில் கரியை பூசியதாக அமையும்,குறிப்பாக இலங்கை பாதுகாபு அமைச்சின் செயலாளர்,கொத்தபாய ராஜ பக்ச.
ReplyDelete