Header Ads



இலங்கையில் வருடாந்தம் 15.000 பேர் புற்று நோயாளிகளாகின்றனர்

'புற்றுநோய் தொடர்பான தவறான கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை இல்லாமற்செய்வோம்" என்பதே இந்த வருடத்தின் (2014) தொனிப்பொருளாகும்.

சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய நாட்டின் புற்றுநோயாளர்கள் பட்டியலில் வருடாந்தம் 15000 நோயாளர்கள் அதிகரிப்பதாகதெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மக்களை தெளிவுபடுத்தும் செயற்றிட்டங்கள் சில முன்னெடுக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

45 வயதிற்குப் பின்னர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அனைவரினதும் சுகாதாரத்திற்கு சிறந்ததொரு விடயமென புற்றுநோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் ஜீ.பரணகம சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்தகாலங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளுக்கமைய நாளாந்தம் இருவர் அல்லது மூவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.