Header Ads



இங்கிலாந்தை 130 கி.மீ. வேகத்தில் சுழற்றியடித்த சூறைக்காற்று: 14 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின

இங்கிலாந்து நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, தென்கிழக்கு இங்கிலாந்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. வெள்ள நீரின் அரிப்பால் செயிண்ட் டேவிட்ஸ்-டாவ்லிஷ் ரெயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இதன் விளைவாக அந்த பாதை வழியாக செல்லும் ரெயில்களில் பயணம் செய்வதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வழியே செல்லும் ரெயில்களை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் இயக்க வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டெவொன் மற்றும் கார்ன்வால் பகுதியில் மழையுடன் சேர்ந்து மணிக்கு 80 மைல் (128.748) வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று சுழற்றியடித்தது. காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தெருவோரங்களில் குவிந்திருந்த குப்பை, கூளங்கள் உயரப் பறந்து நகரின் அழகை அலங்கோலப்படுத்தியது.

பல பகுதிகளில் மின்சார வினியோகம் தடைப்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள சுமார் 14 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த வார இறுதி வரை பலத்த காற்றுடன் மழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம், சாலைகளில் மரங்கள் முறிந்து விழக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகளை கவனத்துடன் செல்லுமாறும் எச்சரித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.