ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் தரம் 11க்கான புதிய வகுப்பு ஆரம்பம்
அட்டாளைச்சேனைக் கல்விக் கோட்டத்தில் மிகவும் தூரப்பிரதேசமிக்கதும், பின்தங்கிய கிராமமுமான ஆலம்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலம்குளம் றகுமானியா வித்தியாலத்தில் இவ்வாண்டிலிருந்து பதினோராம் வகுப்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்று இவ்வாண்டிலிருந்த நடைமுறைக்கு வரும் வகையில் இப்பாடசாலையில் இவ்வகுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அதிபர் ஏ.சி. முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ ஏ.எல். நஸீர், எம். தவம், கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச் செயலாளர், அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி. கஸ்ஸாலி, ஆசிரிய ஆலோசகர்களான என்.சம்சுதீன், எஸ்.எல். மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எம். உவைஸ், எஸ்எல். முனாஸ், ஓல்டி மனாப்,மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு வருகைதந்த அதிதிகளை பாடசாலைச் சமூகம் வரவேற்பதையும், தரம் 11ஆம் வகுப்பினை விசேட மற்றும் கௌரவ அதிதிகளால் திறந்து வைக்கப்படுவதையும், சமய சம்பிரதாயங்களுடன் வகுப்பினை ஆரம்பித்துவைப்பதையும் படங்களில் காணலாம்.
alankulathil class 11 arampam aanaal kottantivu - puttalathil iruntha class athipar neekivittar. ithu muslimkalin pitpokku sinthanai
ReplyDelete