Header Ads



இறக்காமம் அபிவிருத்திச் சங்கம் - கட்டார் (IDSQ) யினால் நடாத்தப்படும் பெற்றார் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

(எம்.ஐ.எம். ஹாபி)

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறைக் கல்வி வலயத்திலுள்ள இறக்காமம் கல்விக்கோட்டத்தில் முன்மாதிரியாகத்திகழும் ஆரம்பப் பிரிவுப் பாடசாலைதான் கமு/சது/ றோயல் கனிஷ்ட கல்லூரியாகும்.

இக்கல்லூரி பிள்ளைநேயப் பாடசாலையாகவும், ஊட்டற் பாடசாலையாகவும் இனங்காணப்பட்டு அதற்கேற்ப மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் இடம் பெற்றுக் கொண்டிருப்பதால் இங்கு கற்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு உழவியல் ரீதியில் பிள்ளைகளை எவ்வாறு அணுகவேண்டும் அவர்களுக்கான தேவைகளென்ன என்பது தொடர்பான 'பெற்றாரும் பிள்ளைகளுடனான உறவும்' எனும் தொனிப்பொருளிலான பெற்றார் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றினை இறக்காமம் அபிவிருத்திச் சங்கம் - கட்டார் IDSQ யினால் 2013.11.05 செவ்வாய்க் கிழமை பி.ப 04.00 மணிக்கு நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

றோயல் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஐனுல் றிபாயா முகஹம்மட் நஸீர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் சிறப்புரை வழங்கவுள்ளார். சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக உத்தியோகத்தர்களான எம்.எச். வஹாப் மற்றும் ஏ.எச். றகீப் ஆகியோர் கருப்பொருள் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந் நிகழ்வு பெற்றார் மத்தியில் பிள்ளை தொடர்பான வாழ்வியலின் தெளிவுகளையும், திருப்பங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்பது இறக்காமம் அபிவிருத்திச சங்கம் - கட்டார் (ஐனுளுஞ) நிறுவனத்தின் எதிர்பார்ப்பாகும். 

No comments

Powered by Blogger.