Header Ads



தனியார் பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 'ஸ்கைப்' மூலம் தெரிவிக்கலாம்

(எம்.எம்.ஏ.ஸமட்)

பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் தொடர்பிலான முறைப்பாடுகளை பயணிகள் 'ஸ்கைப்' தொழில்நுட்பதினூடாக  தெரிவிக்க முடியுமென தனியார் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

பொதுப்போக்குவரத்தின் தரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்துச் சேவையை வழங்கவும் பயணிகளிடமிருந்து விரைவாக முறைப்பாடுகளையும் விபரங்களையும் தெரிந்துகொள்ளும் பொருட்டும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சர் சி.பி ரத்நாயக்கவின் வழிகாட்டலின் பயனாக இந்த ஸ்கைப்பினூடாக பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் பயணிகளின் முறைப்பாடுகளுக்கு உடனுக்குடன் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுமென அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், பயணிகளிடமிருந்து ஸ்கைப் தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடைமுறை மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையுடன் இணைந்து நடைமுறையை அமுல்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது 

மேலும் பயணிகள் தங்களது முறைப்பாடுகளை மின்னஞ்சல் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளினூடதகவும் அமைச்சுக்குத் தெரிவிக்க முடியும்.
சாரதிகள், நடத்துனர்களின் அநாகரியமான செயற்பபடுகள், பஸ்களின் தாமதம் மற்றும் பயணப் பற்றுச்சீட்டு தொடர்பில் அதிகளவிலான முறைப்பாடுகள் பயணிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள தனியார் போக்குவரத்து அமைச்சு இம்முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கைகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுவதுடன் பொதுபோக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளின்  பயணச் சேவையை தரமுள்ளதாக்குவதற்கான நடவடிக்கைகளும் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.