சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச்சங்க தலைவர் பழிவாங்கப்படுகிறாரா..?
(உடையான்)
அண்மையில் நடந்துமுடிந்த சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திற்கான இயக்குனர் சபை தெரிவு நிகழ்வில் (2013 10 20ஆம்திகதி ) டாக்டர் ரசீத் அவர்களின் தலைமையிலான குழு வெற்றியீட்டி புதிய இயக்குனர் சபை 2013 10 21ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டது.இதற்குமுன்னர் இருந்த முறையான நிருவாகசபை கடந்த டிசம்பரில் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அமைச்சர் மன்சூர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட 3 பேர் கொண்ட இயக்குனர் சபையே கடந்த 9 மாதங்களாக பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தை இயக்கி வந்துள்ளது.
முன்னைய சபையிற்கு முன்னர் (2010 இற்கு முன்னர் )இருந்த சபையின் காலத்திலிருந்து சங்கம் நஷ்டத்திலே இயங்குகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.அந்த காலத்தில் இருந்த கடன்களை சிறிது சிறிதாக இந்த சபை கடந்த டிசம்பர் மாதம்வரை இறுத்துவந்துள்ளது (கிட்டத்தட்ட 55 இலட்சம்வரை இறுத்துள்ளது).ஆனால் அமைச்சர் பரிந்துரைத்த நிருவாகம் ரூபா 220000 இலட்சம் மட்டுமே கடந்த 11 மாத காலத்திற்கு கடனில் திரும்ப செலுத்தியுள்ளது.இந்த காலப்பகுதியில் கிட்டத்தட்ட 30 இலட்சம் ரூபாய் பணம் செலவு செய்யப்பட்டிருப்பதாக அறியக்கிடைகின்றது.
சம்மாந்துறை மக்கள் வங்கிக்கிளையில் இருந்த நடைமுரைக்கணக்கொன்று மூடப்படு அதில் இருந்த 1500000 ரூபா மீளப்பெறப்பட்டுள்ளது. 8 சேமிப்புக்கணக்குகள் மூடப்பட்டு அதிலிருந்த பணம் செலவுசெய்யப்பட்டிருக்கிறது,லொறி விற்பனை செய்யப்பட்ட பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது இன்னும் பல முறையில் பணம் பெறப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கின்றது.
இப்படியெல்லாம் செலவு செய்தவர்கள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்படுவதற்கு காரணமாக இருந்த ரூபா 455144 வை திரும்பிச்செலுத்தவில்லை.சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது மதியம் 12:45 மணிக்கு அனால் புதிய சபை உரிய நடவடிக்கைகளை எடுத்து பிற்பகல் 3:15இற்கு அந்நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு வழமையான வியாபர நடவடிக்கைகளில் ஈடுபட வழி வகுத்தது.
தேர்தலில் தோல்வியுற்றதுடன் நின்றுவிடாத அமைச்சரும் அவரவு ஆத்திரமுற்ற ஆதரவாளர்களும் சங்கத்தை மூடும் பணியிலேயே ஈடுபட்டார்களேயோழிய அந்த சங்கத்தை முடக்கிவிடுவதால் மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களையும் நஷ்டங்களையும் கருத்திற்கொள்ளவில்லை.
அத்துடன் நின்றுவிடாமல் தேர்தலில் முழுமூச்சாக அமைச்சரின் சகாக்களை தோல்வியுறச்செய்த டாக்டர் ரசீட்து அவர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றத்தை அண்ணமலை மத்திய மருந்தகத்திற்கு மாகாண சுகதாரப்பணிப்பாளரூடாக பிறப்பித்திருக்கின்றார்.இதன்பிரகாரம் 2013.10.30ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகதாரப்பணிப்பாளர் நிந்தவூர் மாவட்டவைத்தியசாலையில் பணியாற்றும் டாக்டர் ரசீத் அவர்களை விடுவிக்குமாறு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றார் . மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் கடிதத்தில் அமைச்சர் அவர்கள் 29/10/213 ஆம்திகதி கேட்டுக்கொண்டதற்கிணங்க என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது அதிகார பலத்தைப்பரீட்சிப்பதற்காக சிறந்ததொரு இயக்குனர் சபையையும்,ஆளுமையுடைய அதன் தலைமத்துவத்தையும் சந்திசிரிக்கவைப்பதற்கு முயல்வது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான நடவடிக்கைகளால் மக்கள் ஆத்திரமுற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது..இருக்கின்ற செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் பிரதேசத்தில் இன்னும் கட்சியினதும் தனதும் செல்வாக்கை கட்டிஎழுப்ப அமைச்சர் முயற்சி செய்ய வேண்டும்.டாக்டர் ரசீத இன் கீளியன்கிய இயக்குனர் சபை முனைய சபைகளைப்போலன்றி கூடிய கூட்டங்களுக்கான எந்தக்கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்ளாமல் அர்பணிப்புடன் இயங்கியது மக்களால் இன்னும் நினைவு கூறப்படுகின்றது.
Post a Comment