பூமியை போன்று புதிய கிரகம்..?
விண்வெளியில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்ய அமெரிக்காவின் 'நாசா' மையம் கெப்லர் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்புகிறது.
அந்த வகையில், தற்போது ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'கெப்லர்–78 பி' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கிரகம் பூமியை போன்றே வடிவமைப்பு உடையது தனிசிறப்பாகும். இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.
பூமியை போன்று அமைப்பில் உள்ளது. இங்கு பாறைகள் நிறைந்துள்ளன. இங்கு இரும்பு தாது அதிக அளவில் இருக்கும் என நம்பப்படுகிறது.
இது பூமியை விட 1.2 மடங்கு பெரியது. 1.7 மடங்கு கூடுதல் எடை கொண்டது. பூமியை விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் உடையது. இதனால் அங்கு எந்த உயிரினமும் வாழ முடியாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவியல் போலி என்பதை நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டே வருகின்றது நாசா நேற்று முதல் ஒன்பது கிரகத்தை வைத்து மக்களை ஏமாற்றியது, இன்று பத்தாவதை கண்டுபிடித்திருக்கிறோம் என்று கூறுகிறது. நாளை ? இறைவனுடைய படைப்பில் உள்ள இரகசியங்கள் முழுமையையும் அறிய அவனுடைய அனுமதி என்றுமே தேவை!
ReplyDelete