சவூதி அரேபியாவிடம் அணு ஆயுதங்களா..?
சவுதி அரேபியா நாடு பாகிஸ்தானின் ஆணு ஆயுத திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக லண்டன் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
சவுதி அரேபியா கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு நிதியுதவி அளித்துவருகிறது. மேலும் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை குவிக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டு வந்துள்ளது. கடந்த 1980-ம் ஆண்டுகளில் சவுதி அரேபியா சீனாவிடமிருந்து சி.எஸ்எஸ்-2 வகை ஏவுகணைகளை ரகசியமாக வாங்கியுள்ளது.
மேலும் கடந்த 1999முதல் 2002-ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலகட்டங்களில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சவுதி அரேபிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இளவரசர் சுல்தான்பின் அப்துல்லாஸிஸ் அல் சவுத் அணு ஆயுத தி்ட்டத்திற்கு தேவையான நிதியுதவிகளை அளித்து வந்துள்ளதாகவும் அந்நிறுவனம் செய்தி வெளயிட்டுள்ளது.
Post a Comment