Header Ads



கசினோ நிலையங்களில் விபச்சாரம் செய்து பணத்தை சம்பாதிக்கலாம் - மகிந்த சிந்தனையில் இவையா இருக்கின்றன?

புத்த பகவான் போதித்துள்ளபடி அரசாங்கம் ஒன்றை வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் சூதாட்டத்தில் திருத்தங்களை செய்யும் அரசாங்கம் எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்யும் முறையை போதிக்கும் போதனையிலும் திருத்தங்களை செய்யக் கூடும் என கோட்டே நாக விகாரையின் அதிபதி மதுளுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருத்தங்களுடனோ, திருத்தங்கள் இல்லாமலோ கசினோ வர்த்தகம் நாட்டுக்கு தேவையில்லை. நாட்டின் வளங்களை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும். கசினோ சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்ட நேரத்தில் நாட்டில் நல்லொழுக்கதை நேசிக்கும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சூதாட்டம் சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் குற்றமாகும். இலங்கை என்பது ஆயிரக்கணக்கான வருடங்களாக நல்லொழுக்கத்தை பாதுகாத்து வந்த நாடு. நாட்டை அபிவிருத்தி செய்ய தேவையான வளங்கள் நாட்டில் ஏராளமாக இருக்கின்றன. அப்படி இருக்கும் போது கசினோ வர்த்தகத்தை கொண்டு வர வேண்டும் என்று ஏன் இப்படி துடிக்கின்றனர்?.

தொழு நோய் ஏற்பட்டவர்களை ஒரு காலத்தில் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தனர். கசினோ என்பது இந்த தொழு நோயை போன்றதுதான். இப்படி இருக்கும் போது கொழும்பில் இதயமாகவும் வழிப்பாட்டிடமாகவும் இருக்கும் கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பகுதிகளில் கசினோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இது போதென்று கிறவுண் சிறிலங்கா என்று பெயரும் சூடியுள்ளனர்.

இலங்கை என்பது சட்டம் வீழ்ச்சியடைந்து போன நாடு. இவ்வாறான நாட்டில் கசினோ சூதாட்டங்களுக்கு சட்டம் இயற்றுவதால் பயன் ஏதும் இருக்குமா?. இனி வரும் காலங்களில் பெண் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. இலங்கையில் இருந்து கொண்டு கசினோ நிலையங்களில் விபச்சாரம் செய்து பணத்தை சம்பாதிக்க முடியும். மகிந்த சிந்தனையில் இவையா இருக்கின்றன என்றார்.

බුදුන් වහන්සේ වදාළ ආකාරයට රාජ්‍යයක පිරිහීම සිදුකරන සූදුවත් සංශෝධනය කරනා ආණ්ඩුව අතාගතයේදී රටක් පාලනය කළ යුතු අයුරු දැක්වෙන පරාභව සූත‍්‍රය ද සංශෝධනය කරනු ඇතැයි කෝට්ටේ ශ්‍රී නාග විහාරාධිපති මාදුළුවාවේ සෝභිත හිමියෝ පවසති.
සංශෝධන සහිතව හෝ රහිතව කැසිනෝ ව්‍යාපාර අවශ්‍ය නැති බවද පවසන උන්වහන්සේ ශ්‍රී ලංකාවේ ඇති සම්පත් යොදාගෙන රට සංවර්ධනය කිරීමට හැකි යයිද සදහන් කළහ.
කොළඹ පැවති උත්සව සභාවක් අමතමින් වැඩිදුරටත් අදහස් දැක්වූ සෝභිත හිමියෝ මෙසේද පැවසූහ.
‘කැසිනෝ පනතක් පාර්ලිමේන්තුවට ගෙන එන බව කියැවුණු වෙලාවේ මේ රටට සදාචාරයට ආදරය කරන හැමදෙනාම කම්පා වුනා. එයට අදාල ගැසට් පත‍්‍ර දෙක පාර්ලිමේන්තුවේදි වැඩි ඡුන්ද වලින් සම්මත වුනොත් ඒක රටට වන අපරාධයක්. ශ්‍රී ලංකාව වසර දහස් ගණනක සිට සදාචාරය ආරක්ෂා කරගත් රටක්. රට සංවර්ධනය කරන්න අවශ්‍ය සම්පත්  ඕනෑතරම් මෙහි තියෙනවා. කැසිනෝ ව්‍යාපාර ගේන්න මේ තරම් දගලන්නේ ඇයි?
ලාදුරු හැදුන අය සමාජයෙන් ඈත් කරලා තිබුණා. කැසිනෝ කියන්නෙත් ලාදුරු වගේ දෙයක් තමයි. එහෙම තියෙද්දිත් අගනුවර හදවත බඳු ජනාකීර්න ඒ වගේම පූජනීය ස්ථාන තියෙන කොටුව හා කොම්පඤ්ඤවීදියේ කැසිනෝ හදන්න අරගෙන. ඒ මදිවට ඒවට ක‍්‍රවුන් ශ්‍රී ලංකා කියලා නමකුත් දාලා. අපේ රටට ලොකු කීර්තියක්.
ලංකාව කියන්නේ නීතිය බල්ලට ගිය රටක්. එහෙම රටක කැසිනෝ වලට අදාලව නීති හදලා වැඩක් තියෙනවද? මෙහෙ ගැහැණු දරුවන්ට පිටරට යන්න අවශ්‍ය නැහැ. ලංකාවෙ ඉදන්ම කැසිනෝවල ගණිකා වෘත්තියෙ යෙදිලා සල්ලි උපයන්න පුළුවන්. මහින්ද චින්තනයෙ මේවද තියෙන්නේ

No comments

Powered by Blogger.