Header Ads



அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஆளில்லா விமானத்தை தாக்கும் தொழில் நுட்பத்தை பாகிஸ்தான் வடிவமைத்தது

ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் தொழில் நுட்பத்தை, பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் பதுங்கியுள்ள, அல் - குவைதா மற்றும் தலிபான்களை, அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணித்து, தாக்கி வருகிறது. இந்த தாக்குதலில், அப்பாவி மக்களும் அதிக அளவில் பலியாகியுள்ளனர். இதற்கு பாகிஸ்தான் கண்டனம் செய்து வருகிறது. எனினும், பாகிஸ்தானின், இந்த கண்டனத்தை கண்டு கொள்ளாமல், அமெரிக்கா, தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை, நடத்தி வருகிறது. கடந்த வாரம், இந்த முறையில் நடந்த தாக்குதலில், பாகிஸ்தான் தலிபான் தலைவர், மெக்சூத் கொல்லப்பட்டார். 

தலிபான்களுடன் அமைதி பேச்சு நடக்க உள்ள சமயத்தில், மெக்சூத் கொல்லப்பட்டதற்கு, பாகிஸ்தான் வருத்தம் தெரிவித்து உள்ளது. 'எல்லையை தாண்டி, ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்துவது, பாகிஸ்தான் இறையான்மைக்கு எதிரானது' என, பாக், உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும் சாதனத்தை, பாகிஸ்தான் ராணுவம் வடிவமைத்து உள்ளது. பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், பகவல்பூர் என்ற இடத்தில், நேற்று நடந்த, ராணுவ பயிற்சி நிகழ்ச்சியில், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷரீப் கலந்து கொண்டார். அவரது முன்னிலையில், ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்கும், சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 'பாகிஸ்தானின் இந்த ஒத்திகை நிகழ்ச்சி, அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிப்பதற்கான முயற்சி' என, ராணுவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.