யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் பாணந்துறையில் கலந்துரையாடல்
யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்று பதிவுகளையும் விபரங்களையும் திரட்டி நூல் வடிவில் வெளியிடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை கடந்த 02.11.2013 சனிக்கிழமையன்று பாணந்துறையிலுள்ள சாஹுல் ஹமீத் முத்தலிபின் வீட்டில் சந்தித்தனர். இக்கலந்துரையாடல் சகோதரர் நளீம் சாதிக் ; அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பொதுச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜான்ஸின் யாழ்ப்பாண முஸ்லிம்களின் புராதன வரலாற்றையும் இடம் பெயர்வின் பின்னர் மக்கள் சிதறுண்டு வாழ்வதால் ஏற்பட்டுள்ள சமூகத் தாக்கங்கள் பற்றியும் அமைப்பின் கொள்கைகள் நீண்டகால திட்டங்கள் பற்றியும் விளக்கினார். இதன் பின்னர் கூட்டத்துக்கு சமூகம் தந்திருந்தவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.
இக்கலந்துரையாடலின் போது பாணந்துறையில் வாழும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூகநலன் விரும்பிகள் தமது கருத்துக்களை கூறினர். இதன் போது பாணந்துறையில் தவறவிடப்பட்டுள்ள தனிநபர் தகவல்களை திரட்டித் தருவதற்கு புத்தளத்தில் வாழும் வாலிபர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர். இதற்காகவேண்டி எம்.எப்.எம். இக்பால், எஸ்.எச்.முத்தலிப் மற்றும் மக்பூல் ஆசிர்; போன்றவர்களைக் கொண்ட குழுவும் தனிப்பட்ட முறையில் ஏ.எப். புவாத் (இன்ஸ்பெக்டர்), சாதிக் ஆசிரியர், அபுபக்கர் ஹிபதுல்லாஹ் ஆகியோர்களும் பொறுப்பொடுத்துக் கொண்டனர்.இதைவிட தனிநபர்களும் தம்மாலான தகவல்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 6.00 மணிளவில் ஸலவாத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.
யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கத்தின் முழு நிர்வாக உறுப்பினர்களின் விபரங்களையும் பகிரங்கப் [படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDelete