Header Ads



முஸ்லிம் சமூக நல வேலைத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம்

(Badur Shakeal)

முஸ்லிம் சமூகத்தின் கண் பார்வைப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு சமூக நல வேலைத் திட்டத்தின் கீழ் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கருத்தரங்கு ஒன்றை ஸஜிய்யா அமைப்பு கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது.

எமது முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படுகின்ற கட்டமிட்டு காட்டப்படவேண்டிய ஒரு முக்கிய பிரச்சினையான கண் பார்வை பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஒரு சமூக நல வேலைத்திட்டத்தின் கீழ் இலவசமாக கண் பரிசோதனைகளை மேற்கொண்டு மானிய முறையில் மூக்குக் கண்ணாடிகளை வழங்கும் ஒரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் முதற் கட்டமாக வடமேல் மாகாணத்தில் மக்கள் வைத்திய சேவை முகாம்களை நடாத்தும் செயல்நிரலின் கீழ் குருநாகல் மாவட்டம் குளியபிடிய தேர்த்தல் தொகுதியில் அமைந்துள்ள பனாவிடிய முஸ்லிம் கிராமத்தில் கண் பரிசோதனை முகாமொன்று நடாத்தப்பட்டது. கடந்த 2013.11.02ம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் கண் நோய்கள் சம்பத்தமான விளக்கக் கருத்தரன்கொன்று ஏட்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக சாதாரண மனிதனுக்கு ஏற்படக்கூடிய கண் நோய்கள், அவற்றுக்கான அறிகுறிகள், வயதடிப்படையில் ஏற்படக்கூடிய குறைபாடுகள் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் என பல விடயங்கள் திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தின.

மேலும் அன்றைய தினம் வருகை தந்திருந்த அனைவருக்குமான கண்பரசோதனைகள் தகுதிவாய்ந்த கன்பரிசோதகர்கள் மூலம் இலவசமாக மேட்கொள்ளப்பட்டதோடு வசதியடிப்படையில் மானிய முறையில் தரம்வாய்ந்த மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. குறிப்பாக பனாவிடிய முஸ்லிம் கிராமத்தை அண்டிய முஸ்லிம் கிராமங்களான மும்மான, தம்பதெனிய, கடஹபொல, ஹாலியல போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் சமூகமளித்து இச் சேவைகளைப் பெற்றுக்கொண்டது ஒரு விசேட அம்சமாகும்.

UNITED AID FOR HUMAN அமைப்பு SEJIAH அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இன் நிகழ்விற்கு இலங்கை EYE CARE நிறுவனம் தனது பூரண அனுசரணையை வழங்கியிருந்தது.




No comments

Powered by Blogger.