Header Ads



சவுதி அரேபியாவில் உடல்நலம் பாதித்த தந்தையை, காரில் மருத்துவமனைக்கு அழைத்துசென்ற பெண் கைது

சவுதி அரேபியாவில் உடல்நலம் பாதித்த தந்தையை, காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற குவைத் நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளது. இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை வழங்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், சவுதி அரேபியாவின் அண்டை நாடான குவைத்தில், பெண்கள் கார் ஓட்ட அனுமதி உள்ளது. நேற்று ஒரு சொகுசு காரில் குவைத் எல்லை அருகே சவுதி பகுதியில் கார் ஓட்டி சென்ற பெண்ணை போலீசார் மறித்தனர். 

காரில் சர்க்கரை நோயாளியான அவரது வயதான தந்தை இருந்துள்ளார். விசாரணையில் குவைத் நாட்டை சேர்ந்த அந்த பெண், தனது தந்தையை சவுதி எல்லையில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்துள்ளார். ஆனால், சவுதி போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். சவுதியில் பெண்கள் கார் ஓட்ட தடை உள்ளதாக கூறி அந்த பெண்ணை கைது செய்தனர். பின்னர் முதியவரை போலீசாரே மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல் எல்லை பகுதியில் நடைபெற்ற சோதனையில் 16 பெண்களை போலீசார் கைது செய்துள்ளதாக சவுதி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் தடையை மீறி கார் ஓட்டி போராட்டம் நடத்திய 60 பெண்களுக்கு சவுதி அரசு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. பெண்களுக்கு சவுதியில் மாத்திரம்தான் வாகனம் ஓட்டத்தடை விதித்துள்ளார்கள். அதனால்தான் ஏனைய அரபுநாடுகளுக்கு போய் பெண்கள் வாகனம் ஓட்டுவதோடு வாகன அனுமதிப்பத்திரமும் வைத்துள்ளார்கள். இந்த நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுச்சாரதிகள் வேலைபார்க்கிறார்கள். இந்த வீட்டு சாரதிகள் அதிகமானோர் அன்னிய மதத்தைச்சார்ந்தவர்கள். இவர்களுடன் சவுதிஅரேபியப் பெண்கள் 'மஹ்ரம்' இல்லாமல் பயணம் செய்வதை இந்த நாட்டுச்சட்டம் அனுமதித்துள்ளது.

    அதுமட்டுமன்றி விபத்தில் சிக்கிய ஒருவர் உயிருக்காக போராடிய நிலையில் பொதுமக்கள் எவராவது முதல் உதவிக்கு முன்வந்தால் கூட அது இந்த நாட்டுச் சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும். இது இப்படியிருக்கும் போது நோயாளியான தந்தையை மருத்துவமனைக்கு மகள் வாகனம் ஓட்டி அழைத்துச்செல்வது என்பது (அவர் உயிர்போனாலும் சரியே) தண்டனைக்குறியதே.?

    ReplyDelete
  2. Dear Brother, You knowledge is only limited to your hatreds towards Saudi,

    Come and see the respect given to women in this country... No where in the world you will find this Respect and Safety given to women like in Saudi.

    This is the only country HIjaab is fully practiced, Do you want to see women remove their Hijaab after getting permission to drive cars? It is inevitable to removing Hijjab once they started to drive. They are many more issues to come .

    See the good side of police... They stopped the women from driving but police it self took the responsibility and took the sick man to hospital for treatment.

    All the western world are looking to free our women to road, under the name of human right...and finally they wanted to see our mothers and sisters come to road with two peice dress.

    It is very unfortunate that,, many of our Muslim brothers also do not understand this.. but only trying to blame saudi rules, just because they hate this country. for no acceptable reason.

    May Allah guide all of us with correct knowledge of Islam and guide us toward the way of Salaf (3 successful generation) who followed Muhammed(sal) strictly in their life..

    We belongs to different organizations, which do not follow the path of SALAF Saliheens... so we only see things through the policy of organization to which we belong.

    ReplyDelete
  3. பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்பது பெண்களின் அதிபாதுகாப்பிற்காதானே தவிர சவுதி அரசின் நனமைக்காக இல்லை .அங்கு பெண்கள் வாகனம் ஓட்டினால் சவுதிக்கு பல பில்லியன் றியாடல் இலாபம்தான் அந்நிய செலாவணியை கட்டுப்படுத்த முடியும் .

    ReplyDelete

Powered by Blogger.