சைபுல்லாவின் ஓவியக் கண்காட்சி (படங்கள் இணைப்பு)
கோட்டோவியத்தில் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் பண்பாடு, பாரம்பரியம்' எனும் தலைப்பில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மண்டபத்தில் அண்மையில் ஓவியக் கண்காட்சியொன்று இடம்பெற்றது.
கிழக்குப் பல்லைக்கழகத்தின் சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இறுதியாண்டினைப் பூர்த்தி கே.எம். முகம்மட் சைபுல்லா எனும் மாணவரின் கை வண்ணத்தில் உருவான ஓவியங்கள் - இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன.
சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் கற்புலனும், தொழில்நுட்பவியலும் துறையில் பட்டப் படிப்பின் இறுதியாண்டினை நிறைவு செய்துள்ள கே.எம். முகம்மட் சைபுல்லாவின் கோட்டு ஓவியங்களுடன், அவர் வரைந்த ஏனைய ஓவியங்களும் இதன்போது வைக்கப்பட்டிருந்தன.
கறுப்பு நிறப் பேனா ஒன்றை மாத்திரம் கொண்டு - இங்கு காட்சிப் படுத்தப்பட்ட கோட்டு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வாழ்ந்த முன்னோர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கோட்டோவியங்கள் அமைந்திருந்தன.
கிழக்குப் பல்லைக்கழகத்தின் நுண்கலைத் துறைத் தiலைவர் சி. ஜெய்சங்கர், கட்புலன்கலை இணைப்பாளர் ஆர். பிரகாஷ், கலாபூசண் கவிஞர் அன்புடீன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் எம்.எஸ். அப்துல் ஹபீழ் மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எப்.எம்.ஏ. அன்ஸார் மௌலானா உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டு கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.
Post a Comment