பாலியல் துஷ்பிரயோகத்தை தடுத்த பொலிஸ் அதிகாரி, அரசியல் வாதியின் ஆதரவாளர்களினால் தரையில் தூக்கி அடிக்கப்பட்டார்
கண்டி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்துக்கு அருகாமையில் வெளிநாட்டுப் பெண் ஒருத்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருந்த மூன்று வியாபாரிகளைத் தடுக்கச் சென்ற பொலிஸ் அதிகாரியை தூக்கித் தரையில் அடித்த சம்பவம் ஒன்று நேற்று நள்ளிரவில் நடை பெற்றுள்ளது.
கண்டிப் பிரதேச அரசியல் வாதியொருவரின் நெருங்கிய ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் அப்பொலிஸ் அதிகாரி, காரியாலயம் முன்பாக கடமையில் இருந்தபோதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
பொலிஸ் அதிகாரியை அடிக்கும் போது நாம் அந்த அரசியல் வாதியின் ஆதரவாளர்கள் என பெயரைச் சொல்லியே அடித்ததாதாக கூறப்படுகிரது.
அதேவேளை அம்மூவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் விடுதலை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசியல்வாதி பொலிஸாக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவும் மஹிந்த சிந்தனையா?
ReplyDeleteஇப்பதான் செரியான நேரம் வந்திருக்கு .பாதுகாப்பு தரப்போட அரசியல்வாதிகள் மோதிவந்தால்தான் அந்த மகிந்த சிந்தனைக்கு
ReplyDeleteமுடிவு கட்ட முடியும் .