Header Ads



ரணில் விக்கிரமசிங்க நடிக்கப்போகும் நாடகம்..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கருத்து  வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

ரோஹித அபேகுணவர்தன :-

"தலைமைத்துவ சபை தொடர்பில் தற்போது என்ன இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  எதிர்க்கட்சித் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் உள்ளார். அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் அவரே. சிறகுகளை வெட்டியுள்ளார்களா? அல்லது புதிதாக சிறகுகளை இணைத்துள்ளார்களா? என்பதையே பார்த்துக் கொண்டுள்ளோம்.  தெரிவு செய்யப்படும் ஏழு பேருக்கு இதனை பொறுப்பளித்துள்ளனர். 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் அந்த ஏழு பேருக்கும் கடவுளின் துணையென்றே கூற வேண்டும்.  அடுத்தாக மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளமையை ரணில் விக்ரமசிங்க நன்கு அறிந்துள்ளார்.  அதன்போது கரு ஜயசூரியவின் தலைமையில் இந்த ஏழு பேரையும் நியமித்துள்ளார். அந்த தேர்தல்களின் போது ரணில் விக்ரமசிங்க என்ன கூறுவார்?  தற்போது தலைமைத்துவ சபையை உங்களுக்கு வழங்கியுள்ளேன் முடியுமானால் இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்றுக் காட்டுமாறு கரு ஜயசூரியவைப் பார்த்தும், ஏனைய எழு பேரையும் பார்த்தும் ரணில் விக்ரமசிங்க கூறுவார்.  எவ்வித சந்தேகமும் இன்றி அந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும். சில்லறையாக அல்ல மொத்தமாக தோல்வியடைவர்.  அதன் பின்னர் தலைமைத்துவ சபையினால் இதனை வெற்றி கொள்ள முடிந்ததா? என ரணில் விக்ரமசிங்க கரு ஜயசூரியவிடம் கேட்பார்"

2 comments:

  1. கெடுகுடி சொல் கேளாது சிறிகொத்தாவை இழுத்து மூடும் வரை ரணில்தான் தலைவரோ?

    ReplyDelete
  2. ஆழும் கட்சிக்கு ஆற்றிய அளப்பறிய சேவைக்கு இந்த ரணில் விக்கிறமசிங்க நினைத்தால் கூட பதவி விலகமுடியாது....!!! இன்னும் ஐக்கிதேசியக்கட்சியின் பாதிப்பேர்.... கட்சி மாறும்வரை 'நீங்கதான் சார் தலைவர்' வாழ்க உங்கள் சேவை........???

    ReplyDelete

Powered by Blogger.