போலியான புலனாய்வு அறிக்கைகள், மூன்றாம் உலகில் மூக்கை நுழைப்பதற்கான நியாயப்படுத்தல்கள்
(எம்.எம்.ஸுஹைர் - ஜனாதிபதி சட்டத்தரணி)
மேற்குலகின் மறைமுக ஆதரவுடன் மற்றொரு புரளி இந்தியாவினால் பரப்பட்டுள்ளது. இப்புரளி ஒக்டோபர் ,06, 2013 அன்று இந்திய வாராந்த இதழான Sunday Guardian இல் வெளியானது. பாகிஸ்தானிய தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் லக்ஷர் ஏ தைபாவின் (LeT) ஏவுதளமாக கொழும்பு வேகமாக மாறிவருவதாக அவர் அதில் தெரிவித்திருக்கிறார். புது டில்லியைத் தளமாகக் கொண்ட மிகவும் அறியப்பட்ட ஊடகவியலாளர் எஸ். வெங்கட் நாராயணன் இதே விடயத்தைக் கொழும்பைத் தளமாகக் கொண்ட நாளிதழான The Island பத்திரிகையில் ஒக்டோபர் 07 அன்று பதிவு செய்திருந்தார்.
டுநவு ஐயும், இலங்கையையும் முடிச்சுப் போட்டு, ஊடகங்களில் செய்தி வெளியாவது இதுதான் முதல் தடவை என்றில்லை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு, ஒரு மாத காலத்திற்குள்ளாகவே அத்தகையதொரு அறிவிப்பு அமெரிக்க ராஜாங்க செயலகத்திடமிருந்து வெளியானது. லக்ஷர் ஏ தைபா இலங்கையில் வசதி செய்கின்ற நிலையம் (Facilitation Centre) ஒன்றைத் துவங்கி இருப்பதாக அதில் குற்றம் சுமத்தப்பட்டது. தொடர்ந்து உருவான இதனையொத்த பல குற்றச்சாடுக்களுக்கும் இக்குற்றச் சாட்டுதான் ஆரம்பமாக இருந்தது.
பெயர் குறிப்பிடப்படாத இந்திய புலனாய்வுத் துறை மூலங்களில் இருந்துதான் இவை தெரிவிக்கப்பட்டன. மகாராஷ்திரா ஜேர்மன் பேகரி மீது குண்டுத்தாக்குதல் நடாத்தியதாகக் கூறப்படும் ஹிமாயத் பெய்க், இந்தியப் பாதுகாப்புத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போது, தான் கொழும்பில் பயிற்சியளிக்கப்பட்டதாக அவர் கூறியதாக இந்தியப் புலனாய்வு மூலங்களை ஆதாரம் காட்டி, செப்டம்பர் 2010 இல் வெளியான அறிக்கைகள் தெரிவித்தன. அண்மையில் ஆகஸ்ட் 22, 2013 அன்று லக்ஷர் ஏ தைபா யாழ்ப்பாணத்திலிருந்து, தென்னிந்தியாவைத் தாக்கத் திட்டமிட்டு வருவதாகவும் இந்தியப் புலனாய்வுத் துறையில் இருந்து செய்திகள் கசிந்தன.
இந்தியாவில் இருந்து வெளியான இவ்வனைத்து செய்திகளும், எதுவித உறுதிப்படுத்துகின்ற ஆதாரங்களும் இன்றி ஊடகங்களின் காதுகளில் அரசியல் நோக்கங்களோடு ஊதப்பட்டன.
பெரும்பாலான நேரங்களில் தொடர்புடைய நாடான இலங்கையுடன் இரகசிய அறிக்கைகள் பகிரப்படவில்லை. முக்கியமாக இலங்கைப் பாதுகாப்புத் துறை இவ்வொவ்வொரு குற்றச்சாட்டையும் மறுப்பதற்குக் கூடிய சிரத்தை எடுத்துக் கொண்டது.
65 வருட கால கஷ்மீர் நெருக்கடியின் பின்னணியில் இடம்பெறுகின்ற, இந்திய- பாகிஸ்தான் பசப்புரை என இதனை ஒருவர் இலகுவாகப் புறம் தள்ளி விடலாம். ஆனால், டுநவு கதை மீண்டும் மீண்டும் ஏன் கிளரப்படுகிறது என்பதையும், ஏன் இலங்கையில் அப்புரளியை நிலை நாட்டுவதற்கு இவர்கள் முனைகிறார்கள் என்றும் ஆழமாக நோக்க வேண்டும்.
அண்மைக்கால உலக நிகழ்வுகளையும், அமெரிக்காவின் தலையீடுகள், ஆயுத சோதனைகள் , இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என்பவற்றையும் நோக்கும் போது, 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (சு2P) உள்ளிட்ட சர்வதேச சட்டங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாமல், சுதந்திர நாடுகளின் இறைமை மற்றும் நேர்மை என்பவற்றை மறுக்கும் வகையிலும், சர்ச்சைக்குரிய, போலியான குற்றச் சாட்டுகளைக் கூறி எடுக்கப்பட்ட ஈராக், பாகிஸ்தான், ஆப்கான், சிரியா என்பவற்றின் மீதான நடவடிக்கைகளையும், மிக அண்மையில் சோமாலியா, லிபியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் நோக்கும் போது, இலங்கையில் தலையீடு செய்வதற்கான தந்திரமொன்றாக லக்ஷர் ஏ தைபா என்ற துருப்பு ஏன் பயன்படுத்தப்படக் கூடாது என்கிற நியாயமான சந்தேகம் எழத்தான் செய்கிறது.
திரிபோலியில் தனது இல்லத்திலிருந்து அமெரிக்கப் படைகளால் அபூ அனஸ் அல்- லிபி கடத்தப்பட்டமையை, அமெரிக்க சார்பான லிபியப் பிரதமர் எதிர்த்த கையோடு, அவரும் கடத்தப்பட்டார். அபூ அனஸ் விவகாரத்தில் அமைதி காப்பதாக உறுதி அளித்த பிறகே பிரதமர் விடுதலை செய்யப்பட்டார்.
அமெரிக்கா ஒரு புறம் இருக்க, இலங்கையில் மூக்கை நுழைப்பதற்கு இந்தியாவிற்கும் தயக்கம் இருந்ததில்லை. 1987 இல் இங்கையில் மூக்கை நுழைத்து, சர்ச்சைக்குரிய இந்தோ- லங்கா உடன்பாடும் செய்துகொள்ளப்பட்டது.
முன்னாள் அமெரிக்க ஹிட்மன் (கொலைகாரர்) எனத் தன்னையே அழைத்துக் கொள்ளும் துழாn Pசநமiளெ, தனது ஊழகெநளளழைளெ (2006) என்ற நூலில், எவ்வாறு உலக அதிகாரத்தை அமெரிக்கா பெற்றுக் கொண்டது போன்ற பல்வேறு உள்வீட்டு விவகாரங்களை அம்பலப் படுத்துகிறார். 'என்னைப் போன்றவர்களுக்கு, உயர் சம்பளம் வழங்கப்படுகிறது. நாம் தடுமாறினால், எம்மை விட கொடுமையான ஹிட்மன் அனுப்பப்படுவர். அதன் பிறகு துயஉமயடள (குள்ளநரிகள்) ................. துயஉமயடள தோல்வி அடைவார்கள் என்றால், வேலை கடைசியாக இராணுவத்தின் கைகளில் போய் சேரும்'.
பாகிஸ்தானில் மறைந்திருந்த உஸாமாவைப் படுகொலை செய்வதற்கு துயஉமயடள கள்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். உலகின் மிகவும் வேண்டப்பட்ட பயங்கரவாதியைக் கைது செய்து, கூடுதலான புலனாய்வுத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்யாமல், ஒபாமாவும், அவரது அமைச்சரவையும் படுகொலையின் பயங்கரமான காட்சிகளை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருந்தது. சிறியளவே அறியப்பட்ட அபூ அனஸ் அல்-லிபி விசாரணைகளுக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டது போல் அல்லாமல், உலகின் மிகவும் வேண்டப்பட்ட பயங்கரவாதி அமெரிக்காவினால் முக்கியமானவராகக் கருதப்படாமை ஆச்சர்யமானதுதான்!
ஒக்டோபர் 05, 2013 அன்று லிபியாவில் அபூ அனஸ் அல்- லிபியைக் கடத்தியவர்களும் பெரும்பாலும் துயஉமயடள கள்தான். Pநசமiளெ உடைய நூலைப் படிக்கும் போது, ஈராக், ஆப்கானிஸ்த்தான் என்பவற்றில் தலையிட்டவர்களும் துயஉமயடகள்தான் என்பது தெளிவாகிறது. சிரியாவில் பெருந்தொகையான துயஉமயட களினால் எதுவும் செய்ய இயலாமல் இருக்கின்ற நிலையில், பெரும்பாலும் இராணுவத் தலையீடொன்று இடம்பெறலாம். ஹஅமெரிக்கப் படுகடன் உச்ச எல்லையை 16.7 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து உயர்த்துமாறு ஒபாமா விடுத்திருக்கின்ற கோரிக்கையை (அமெரிக்கப் பொருளாதாரமும், உலகின் பிற பாகங்களின் பொருளாத்தையும் மிக மோசமாகப் பாதித்து விடக் கூடிய தொகையை) காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த கையோடு இது நடக்கலாம்.
'சாம்ராஜ்ஜியங்கள் நிலைப்பதில்லை. ஒவ்வொரு சாம்ராஜ்ஜியமும் மிக மோசமாகத் தோல்வி கண்டுள்ளது. கூடுதலான அதிகாரத்தை நோக்கி அவர்கள் போட்டியிடும் போது, எத்தனையோ கலாசாரங்களை அவர்கள் அழித்திருக்கிறார்கள். இறுதியில் அவர்களே விழுந்து விடுகிறார்கள். மற்றவர்களைச் சுரண்டுவதன் மூலம் நீண்ட காலத்திற்கு ஒரு நாட்டினாலோ, பல நாடுகள் இணைந்தோ வெற்றியடைய முடியாது' என்கிறார் Pநசமiளெ.
போலியான குற்றச் சாட்டுகளும், கற்பனையான புலனாய்வு அறிக்கைகளும் தமது நேரடித் தலையீடுகளை நியாயப்படுத்துவதற்கும், மூன்றாம் உலக நாடுகளில் தமது இலக்குகளை எய்திக் கொள்ளவும் கூடிய அரசியல் கருவியாகப் பயன்படுத்தபடுகின்றன. இலங்கை விவகாரத்தில் மட்டும் இது விதி விலக்காக இருக்க முடியாது.
ஈராக் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு அதனிடம் அழிவு தரும் ஆயுதங்கள் இருக்கின்றன என்ற நியாயம் முன்வைக்கப்பட்டது. மில்லியன் கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டு, அல்லது ஊனமாக்கப்பட்ட பிறகும் அழிவு தரும் ஆயுதங்கள் ஈராக்கில் கிடைக்கவில்லை. ஆனால், ஈராக்கை ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்தி, இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற அமெரிக்காவின் இலக்கில் அது வெற்றி பெற்றுள்ளது. இரு நூறு அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கின்ற இஸ்ரேலிற்கு ஆபத்தாக ஈராக்கின் றுஆனு இருப்பதாக இதற்காக உலகம் நம்ப வைக்கப்பட்டது.
இதே போன்றுதான், அல் கைதாவிற்குப் பயிற்சி வழங்கி, அதற்கு அடைக்களம் வழங்கி வருவதாக ஆப்கானிஸ்தான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிந்திய, ஆப்கான் மீதான இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்த அக்குற்றச்சாட்டு பயன்படுத்தப்பட்டது
தாலிபான்களை தற்காலிகமாக முடமாக்கி, நாட்டில் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச அம்சங்களையும் அழித்தொழித்து, ஏற்கனவே பின்னடைந்திருந்த நாட்டை மேலும் பல தசாப்தங்கள் அமெரிக்கா பின்னடையச் செய்தது.
செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று இருபத்தி நான்கு மணித்தியாலத்திற்குள், ஆப்கானில் இருக்கின்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளை அழித்தொழிப்பதற்கு நாட்டைத் திறந்து தரா விடின், கற்காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும் என அமெரிக்க ராஜாங்க செயலர் கொலின் பவல், துணைச் செயலர் ரிஷர்ட் ஆர்மிடக் ஆகியோரால் பாகிஸ்த்தான் எச்சரிக்கப்படுகிறது. 180 மில்லியன் சனத்தொகையையும், அணு ஆயுதங்களையும் கொண்ட ஒரு நாட்டை வழிநடாத்திய இராணுவ ஜெனரல், அமெரிக்க அச்சுறுத்தலுக்கு முன் சரணடைகிறார். செப்டம்பர் தாக்குதலில் ஆப்கான் ஈடுபட்டமைக்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில்தான் இவ்வச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இன்னும் விரிவாகச் சொல்வதானால், தாக்குதல் தொடர்பிலான எதுவித விசாரணையும் கூட அப்போது துவங்கப்பட்டிருக்கவில்லை.
சிரியாவில் ஆட்சி மாற்றம் ஒன்றிற்காக அமெரிக்காவும், மேற்குலகும் எதிர்த்தரபினருக்கு வெளிப்படையாகவும் வெட்கமற்ற முறையிலும் ஆயுதங்களை வழங்கின. நாடில்லாமல், வாழ்வதற்கு நிலமோ, வெளியேறுவதற்குப் பாஸ்போர்ட்டோ இல்லாத நிலையில், வாழ்ந்து வருகின்ற பலஸ்தீனியர்களின் ஆதரவாளரான அஸாதைக் கவிழ்ப்பதற்கே இந்த ஏற்பாடு.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதே இவை அனைத்தினதும் பின்னணியில் தெரிவிக்கப்பட்ட பிரதானமான நோக்கமாக இருந்த போதிலும், இந்நாடுகளும், அவற்றின் வளங்களும், விஞ்ஞானிகளும் , புலமைத்துவவாதிகளும் அழித்தொழிக்கப்படுவதைத்தான் உலகம் கண்டது. இருந்த போதும், நம்ப முடியாத அளவில் உலகம் அமைதி காத்தது. ஜனாதிபதி ரீகனில் இருந்து, அடுத்தடுத்து பதவிக்கு வந்த ஒவ்வொரு ஜனாதியதியும், மத்திய கிழக்கு, இஸ்ரேலைப் பொறுத்த மட்டில் பாதுகாப்பாக இருப்பதை, என்ன விலை கொடுத்தாவது உறுதி செய்து வந்தார்கள். இதற்கு விலையாக மற்றவர்களது உயிர்களும், உடமைகளும் வழங்கப்பட்டன.
அமெரிக்கவைப் பொறுத்த வரை, உலகின் எப்பகுதியில் அது எதனை செய்வதாக இருப்பினும், அதற்கு சு2P அல்லது சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எந்தவொரு சட்ட ரீதியான அடிப்படையும் அவசியம் இல்லை என்ற நிலை இன்று உருவாகியுள்ளது.
பிரஞ்சு மற்றும் அமெரிக்கப் புரட்சிகளால் உத்வேகம் பெற்ற சர்வதேச சட்டவியலாளர்கள் மற்றும் சமாதானத்தை நேசிக்கும் தலைவர்களால் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கும், மனித உரிமை தொடர்பான உலகளாவிய பிரகடனமும் இன்று சீரியஸான அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இதன் மிக மோசமான அம்சம் அமெரிக்கா தனது திருகு தாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டி இருப்பதும், பதில் கூற வேண்டிய கடப்பாட்டை அது மறந்து விட்டிருப்பதும்தான்.
போலியாக அல்லது தவறாக வழிநடாத்துகின்ற புலனாய்வு அறிக்கைகள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டியுள்ளமைக்கு வேறு காரணிகளும் இருக்கின்றன.
'பயங்கரவாதம்' என்ற சொல்லாடலை விடவும், இராணுவத் தலையீடு நடக்குமிடங்களில் எல்லாம் கூடுதலாக, இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் போன்ற சொல்லாடல்களே பயன்படுத்தப்படுகின்றன. அதுதான் புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள அலாவுதீனின் அற்புத விலக்கு. கருங்கற்களால் செய்யப்பட்ட சுவர்கள் கூட இதனால் திறந்து கொள்ளும்.
மேற்குலகப் புலனாய்வு அமைப்புக்கள் இந்தியாவோடு நெருக்கமாக வேலை செய்வதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஏனைய நாடுகளோடும் அவை இவ்விதம் செய்கின்றன. மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அவை வெளிநாட்டுப் பயணங்களை ஒழுங்கு செய்கின்றன.
முக்கியமாக அமெரிக்க ராஜாங்க செயலகத்தினால் வெளியிடப்பட்ட லக்ஷர் ஏ தைபா புரளி இலங்கை மீது நடப்பட்ட ஒரு தவறான கொடிதான். இலங்கையில் லக்ஷர் ஏ தைபா வசதி செய்கின்ற நிலையம் ஒன்று நிருவப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகின்ற இரகசிய அறிக்கையொன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதில் இப்புலனாய்வுத் தகவல் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இக்குற்றச்சாட்டு உண்மையாயின், அதனால் கூடுதல் பிரயோசனம் அடையப் போகின்ற இலங்கைக்குக் குறித்த தகவல் வழங்கப்பட்டதாக அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்தகவல் இலங்கைக்குப் பரிமாறப்பட்டிருப்பின், அத்தகையதொரு நிலையம் இலங்கையில் இருந்திருப்பின், இலங்கை அதிகாரிகள் அதனைக் கண்டு பிடித்திருக்கலாம். சம்பந்தப்பட்டவர்களை மடக்கிப் பிடித்து, பாகிஸ்தானோடு பேசி, விடயத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால், அவ்விதம் எதுவுமே இடம்பெறவில்லை. ஒரு தேவையை அடிப்படையாகக் கொண்ட உபாயமாக இந்தியா இவ்விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா விரும்பி இருக்கிறது என்பது மட்டுமே இதன் பின்னணியில் அப்பட்டமாகத் தெரிகிறது.
Post a Comment