உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடு - சவூதி அரேபியாவும் இடம்பிடிப்பு
உலகில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-10 பட்டியலில் 515 கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்த இடங்களை முறையே சீனா (157), ஜெர்மனி (148), பிரிட்டன் (135), ரஷ்யா (108) ஆகிய நாடுகள் விளங்குகின்றன. பின்னர் 103 மிகப்பெரிய கோடீஸ்வரர்களை கொண்டு இந்தியா 6-வது நாடாக விளங்குகிறது.
மேலும், பிரான்ஸ், சவூதி அரேபியா, சுவிட்சர்லாந்து, மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் முறையே டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
நாட்டின் வர்த்தக நகரமாக விளங்கும் மும்பையில் மட்டும் 30 கோடீஸ்வரர்கள் இருக்கின்றனர். உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட டாப்-5 நகரங்களில் 5-வது நகரமாக மும்பை விளங்குகிறது. 96 கோடீஸ்வரர்களுடன் உலகின் முதலாவது இடத்தில் நியூயார்க் நகரம் விளங்குகிறது. ஹாங்காங், மாஸ்கோ, லண்டன் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
உலக அளவில் 2170 கோடீஸ்வரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Post a Comment