Header Ads



கல்முனை ஸாஹிறாக் கல்லூரி மகா சபையின் அறிவித்தல்


(ஏ.எல்.ஜுனைதீன்)

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் சிலர் தமது சுயநலத்திற்காக செயல்படுகின்றார்கள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு எங்களைப் போன்றவர்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. கல்லூரிக்கு எதிரான அவர்களின் அந்த தீய முயற்சிகள் வெற்றி பெறவும் மாட்டாது. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வி கற்கும் மாணவர்கள் எதுவித அச்சமுமின்றி தைரியமாக தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் மகா சபைத் தலைவரும் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற உடற் கல்வி அதிகாரியுமான கே.எல்.அபூபக்கர் லெப்பை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் அண்மையில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்காலத்தில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதிருக்கும் பொருட்டும் கல்லூரியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள் அடங்கிய மகா சபை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

இம் மகா சபையில் இக் கல்லூரில் கல்வி கற்ற வைத்தியர்கள், பொறியியலாளர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், உலமாக்கள், என பலர் அடங்கியிருக்கின்றனர். கல்லூரியின் மகா சபைத் தலைவராக இக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வு பெற்ற உடற் கல்வி அதிகாரியுமான கே.எல் அபூபக்கர்லெப்பை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிரார்.

கல்லூரியின் மகா சபைத் தலைவர் கே.எல்.அபூபக்கர் லெப்பை கல்லூரி தொடர்பாக தொடர்ந்து கூறுகையில் மேலும் தெரிவித்ததாவது,

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி இலங்கயிலுள்ள பாடசாலைகளில் அதிக எண்ணிக்கையான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பிய பாடசாலையாகும். கல்வியில் மாற்றிரமல்லாது ஏனைய துறைகளிலும் இக்கல்லூரி மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தி கல்லூரிக்கு புகழைத் தேடித் தந்திருக்கிறார்கள்.

இக் கல்லூரியில் கல்வி கற்ற பலர் இன்று வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் நாடெங்கும் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்றம் கூட சென்றிருக்கிறார்கள்.

எனது அதிபர் பதவி காலத்தில் மர்ஹும் பதிஉத்தீன் மஹ்மூத் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த போது  இக் கல்லூரியில் அகில இலங்கை தமிழ் தின விழாவைச் சிறப்பாக நடத்தியிருந்தோம். இதற்காக பலரிடம் இருந்து இக் கல்லூரிக்குப் பாராட்டுக்கள் கிடைத்தன. இது போன்று இக் கல்லூரி பல சாதனைகளைச் செய்து இருக்கின்றது.

இவ்வாறு பல துறைகளிலும் திறமை காட்டும் இக் கல்லூரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஒரு சிலர் செயல்படுவதை எம்மால் அனுமதிக்க முடியாது.

கல்லூரியில் இடபெற்ற வேண்டத்தகாத அசம்பாவிதம் தொடர்பாக கலூரியின் மகா சபையினராகிய நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களை நேரடியாகச் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வத்துள்ளோம் அவைகளை நிறைவேற்றித் தருவதாக அவர் எங்களுக்கு உறுதி மொழி தந்துள்ளார். இது போன்று   பொலிஸாருக்கு கல்லூரி நலன் தொடர்பான விளக்கத்தை விபரமாக வழங்கியுள்ளோம். இது மாத்திரமல்லாமல் வலயக் கல்விப் பணிப்பாளரையும் சந்தித்தும் கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

கல்லூரி ஆசிரியர்கள், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் எதுவித அச்சமுமின்றி தைரியமாக கல்வி நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்.மகா சபையினராகிய எங்களின் உதவி எப்போதும் இருக்கும். என்றார்.

1 comment:

  1. அதிபர் என்றால் அவர் இவர்தான்.
    யாரும் மறக்கமாட்டார்கள்
    அவர் நடந்தால் பாடசாலை நடுங்கும்
    மாமரங்கள் இன்றும் அவரை வாழ்த்தும்
    மாங்காய் மரமெல்லாம் குலுங்கும்
    அதனை தொட்டால் அதனை கடித்துக்கொண்டு கால் வலிக்க ஒரு பாடவேளை மைதானத்தை பார்த்தவண்ணம் நிட்கவேண்டும்.
    வகுப்பறை நிறைந்து இருக்கும்.பாடங்கள் நடந்தேறும். இல்லாவிட்டால் அதிபர் அங்கு பாடம் நடத்துவார்.
    ஒழுக்கத்துக்கு அவர் ஓர் உதாரணம்.
    வெள்ளை உடுப்பும் , முகம் பார்க்கும் கறுத்த சப்பாத்தும் இன்றும் நினைக்கிறது.
    நேரத்துக்கு மணி அடிக்கும், கதவுகள் பூட்டப்படும்.
    அன்றும் இன்றும் போற்றப்பட்டவர் கடைசி நேரத்திலும் காக்க வந்த சிங்கம் ஆம் எல்லாரும் அவர் சொன்னால் கேட்பார்கள் ...

    ReplyDelete

Powered by Blogger.