பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது - மஹிந்த
(Tm) இலங்கை இராணுவத்துக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டு யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அவை தொடர்பில் கண்டறிந்து உள்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி உரிய தண்டனைகள் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
கடந்த 30 வருடங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துள்ளது என்றும் ஜனாதிபதி கூறினார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனிடம் கேட்பதற்கு என்னிடமும் கேள்வி இருக்கின்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ”நாட்டை பிரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஒருபோது இடமளியாது” என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் அங்கு தெரிவித்தார்.
Post a Comment