Header Ads



சவூதி அரேபியாவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் சிக்கல்

(bbc) சௌதி அரேபியாவில் வேலை செய்த வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தங்கள் இருப்பை சட்டபூர்வமாக்கிக்கொள்ள சௌதி அரசு கொடுத்திருந்த கால அவகாசம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், அங்கு சுமார் 30,000 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போலிஸ் சோதனைக்கு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால், பல உணவு விடுதிகள், சலவைக்கடைகள், சிறு வர்த்தகக் கடைகள் போன்றவை மூடப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இல்லாததால், இறந்த உடல்களைக் கழுவும் பணி போன்ற வேலைகளைச் செய்ய யாரும் இல்லாத நிலையில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமார் 8,000 தொழிலாளர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு செல்ல இந்தோனேஷியா விமானங்களை ஏற்பாடு செய்ய முயன்று கொண்டிருப்பதாக இந்தோனேஷிய அதிகாரி ஒருவர் கூறினார்.

இவர்களில் பலர் சௌதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்துவந்தவர்கள்.

No comments

Powered by Blogger.