சம்மாந்துறை வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலய மாணவிகளை கௌரவித்து பாராட்டும் விழா
(ஏ.எல்.ஜனூவர்)
இவ்வருடம் வரலாற்றில் முதல் முதலாக புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வாங்காமம் ஒராபி பாஷா வித்தியாலயத்தின் மாணவிகளை கௌரவித்து பாராட்டும் விழா நேற்று பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அதிபர் ஏ.ஆர்.எம்.அமீன் தலைமையில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண வீதி அபிவருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கும், திறமைகளை வெளிக்காட்டிய மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சரினால் பணப்பரிசில்கள் மற்றும் நிணைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.கே.மன்சூர், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.ஜாபீர், கோட்டக்கல்வி அதிகாரி எம்.எச்.சித்தீக் உட்பட கல்விமான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment