ரியூஷன் வகுப்புக்களுக்குச் செல்லும் சிறுவர்கள் கண்பார்வை குறைந்தவர்களாக உள்ளனர் - வைத்திய அத்தியட்சகர் ஜாபிர்
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
(ரியூஷன்) பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லும் சில சிறுவர்கள் கண்பார்வை குறைந்தவர்களாக உள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தெரிவித்தார்.
உம்மதுர் ரிஸாலா அமைப்பினால் 2013 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் உவைஸ்(பலாஹி) தலைமையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில்,
ரியூஷன் வகுப்புக்கள் ஒலியில்லாத இடங்களிலும் மூடிய இடங்களிலும் நடாத்தப்படுவதனால் மாணவர்களின் கண்பார்வை குறைந்து காணப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடாத்தப்படும் சகல ரி10ஷன் வகுப்புக்களும் படிப்பிப்பதற்கு உகந்ததா?இல்லையா? என்பது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. நாங்கள் அந்த நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று பாடசாலை மட்டத்தில் காலை 07.30முதல் 2.00மணி வரையான காலப் பகுதிக்குள் முறையாக கல்வி கற்கப்படுமாயின் எவ்வித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்ல வேண்டியதில்லை.அப்படி மேலதிகமாக வகுப்புக்களுக்கு செல்ல வேண்டுமானால் பாடசாலையில் மேலதிக வகுப்புக்களை நடாத்த முடியும்.
இன்று சில மனிதர்களின் தேவைக்காக நடாத்தப்படுகின்ற ரியூஷன் வகுப்புக்களினால் எமது சிறார்களை,நாளைய எதிர்காலத் தலைவர்ளை சீரழிக்க முடியாது.
பாடசாலையில் சிறந்த முறையில் கல்வி வழங்கப்படுகின்றதா?இல்லையா? என்பதை கண்கானிப்பாளர்கள் கவனிக்க வேண்டும்.
அது மட்டுமல்லாது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பது பிழையல்ல.ஆனால் ஏனைய மாணவர்களையும் சிந்திக்க வேண்டும்.
பரீட்சைக்கு தோற்றுபவர்களில் அதிகமானவர்கள் சித்தியடைவதில்லை.இதனால் சித்தியடையாத மாணவர்கள் மனம் புண்படுகிறது.
ஆகவே தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவர்களுக்கு தேவையா? என்பதை மீள்பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
இன்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு பெற்றோரும் மாணவர்களும் கொடுக்கின்ற முக்கியத்துவம் மிக முக்கிய பரீட்சைகளான க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
ஆகவே பாடசாலை மட்டத்தில் மாணவர்களுக்கு முழுமையான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் முடியுமான வரையில் பிரத்தியேக ரியூஷன் வகுப்புக்களை தவிர்த்து பாடசாலை நேரத்தில் சிறந்த கல்வியை வழங்குவதுடன் மேலதிக வகுப்புக்களை பாடசாலையில் நடாத்த முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
Post a Comment