பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டார்
(ஹசித்த குறுப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) முன்னாள் புலனாய்வுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானின் இருப்பிடம் பற்றிய சந்தேகங்களுக்கு சர்வதேச பயங்கரவாத நிபுணரான பேராசிரியர் றோகான் குணரட்ன, பொட்டு அம்மான் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார் அவருடனான நேர்காணலில் இருந்து சில எடுத்தாள்கைகள்:
கேள்வி: நீங்கள் அறிய நேர்ந்த முதலாவது அரசியல்வாதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களா?
பதில்: நான் பேராசிரியர். பொன்னம்பெருமாவுடன் சேர்ந்து அவரைக் காணச் சென்றிருந்தேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலமைகள் பற்றி அவர் சுருக்கமான விபரங்களைக் கேட்டிரு;தார். நான் அதைச் செய்து கொடுத்தேன், மேலும் நான் 1987ல் பிரபாகரனைச் சந்திப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு கூடச் சென்றிருக்கிறேன்
கேள்வி: அது எப்படி நடந்தது?
பதில்: நான் யாழ்ப்பாணத்துக்கு ஜூலையில் சென்றிருந்தேன், ஆனால் பிரபாகரனை ஆகஸ்ட் 4ம் திகதியே சந்தித்தேன். அப்போது நான் பயன்படுத்தி வந்த சிறிய புகைப்படக் கருவியினால் நான் பிரபாகரனை ஒரு புகைப்படம் எடுத்திருந்தேன். நான் எழுதிய ஸ்ரீலங்காவில் யுத்தமும் சமாதானமும் என்கிற புத்தகத்தில் அந்தப் புகைப்படத்தை பிரசுரமும் செய்திருந்தேன். அது என்னுடைய முதலாவது புத்தகம் அல்ல. நான் ஏற்கனவே ஸ்ரீலங்காவுடனான சீனாவின் உறவுகள் பற்றி சீன லங்கா தொடர்புகள் என்கிற புத்தகத்தை எழுதியுள்ளேன். ஜனாதிபதி ஜெயவர்தனவி;ன் வேண்டுகோளுக்கு அமைய அதை நான் எழுதியிருந்தேன். ஆகஸ்ட் 1983 முதல் 1987 ஜூன் வரை இந்திய புலனாய்வுச் சேவையின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவினர் (றோ), ஸ்ரீலங்காவில் இருந்த பயங்கரவாதிகளுக்கு உதவி வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்காக இந்தியாவில் ஒரு இராணுவ தளம்கூட வழங்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசத்தின் டெஹ்ராடன்னில் அமைந்துள்ள வக்ராத்தாவில் எல்.ரீ.ரீ.ஈயின் முதல் தொகுதியினருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இரண்டாவது தொகுதியினர் ஹிமாச்சாலில் பயிற்சி பெற்றார்கள். மேலும் எட்டு அணியினருக்கும் தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தச் சமயத்தில் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருந்தன. இந்தியாவின் நெருக்கமான உறவுகள் சோவியத் ருஷ்;யாவுடனேயே இருந்து வந்தன. ஸ்ரீலங்கா தனது தொடர்புகளை அமெரிக்கா, ஐரோப்பா,பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனேயே பேணி வந்தது. ஸ்ரீலங்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையேயுள்ள உறவுகளை ஆராயும்படி ஜனாதிபதி ஜெயவர்தன என்னைக் கேட்டுக்கொண்டார்;. அந்த ஆராய்ச்சியின் விளைவுதான் சீன லங்கா தொடர்புகள் என்கிற புத்தகம். பின்னர் ஒரு சமயம் சீனப் பிரதமர் லீ சியாங் யாங் தனது மனைவியுடன் ஸ்ரீலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்தார். அப்போது கொழும்பு மேயராக இருந்த சிறிசேன குரே அவர்களின் முன்னிலையில் வைத்து எனது ஆராய்ச்சியை அவருக்கு பரிசளித்தேன்.
கேள்வி: அந்தச் சந்திப்பில் பிரபாகரன் உங்களிடம் என்ன சொன்னார்?
பதில்: இந்நேரம்வரை வெளியே தெரியாத ஒரு இரகசியத்தை நான் வெளிப்படுத்த விரும்புகிறேன். எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவுடன் சண்டையிடுமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி ஜெயவர்தன அறிய விரும்பியதாலேயே நான் யாழ்ப்பாணம் சென்றேன். அதைப்பற்றி நான் ஆராய விரும்புகிறேன் என்று அவரிடம் நான் தெரிவித்தேன். யாழ்ப்பாணத்தில் பிரபாகரனுடன் நான் கலந்துரையாடினேன். இந்திய அமைதி காக்கும் படைத் தளபதிகளான ஜெனரல் ஹர்க்கிரட் சிங்,ஜெனரல் தீபேந்திர சிங் மற்றும் பிரிகேடியர் பேர்டினன்டோஸ், ஆகியோருடனும் நான் கலந்துரையாடினேன். இந்த மூவருமே ஸ்ரீலங்காவில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்தார்கள். யாழ்ப்பாண விஜயத்தின் பின்னர் எனது அறிக்கையை ஜனாதிபதியிடம் கொடுத்தேன். அப்போது ஜனாதிபதி ஜெயவர்தனவின் மகன் ரவி ஜெயவர்தன அவர்கள்தான் பாதுகாப்பு சம்பந்தமாக ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தார். அவர் மிகவும் திறமையுள்ள நேர்மையான ஒரு மனிதர். பணம் தொடர்பான விடயங்களை பொறுத்தவரை ஜனாதிபதி ஜெயவர்தன அவர்களும்கூட மிகவும் நேர்மையானவர்.
கேள்வி: நீங்கள் பிரபாகரனின் சமையல்காரரையும் சந்தித்தீர்களா?
பதில்: ஆம், அவர் சமையல்காரனாகவும் அதேசமயம் பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பு தலைவராகவும் இருந்தார். நான் பிரபாகரனின் மருத்துவரையும்கூட சந்தித்தேன். இந்த நபர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு கற்பனா இன்பம் இருப்பதை நான் அறிந்துகொண்டேன். அவரது கற்பனை அவர் பற்றார்வமுள்ள விசிறியாக இருந்த ஹாலிவூட் திரைப்படங்களை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. அவர் ஹாலிவூட் படங்களைப் பார்த்து தனது ஓய்வு நேரத்தில் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி எடுத்து வந்தார். ஹாலிவூட் திரைப்படங்கள் அவருக்கு அறிவுவழங்கும் ஒரு வளமாக இருந்தன. பிரபாகரனுக்கு பிடித்தமான உணவு இந்திய சீன சமையல்கள் மற்றும் ஐஸ் கிறீம் என அவரது சமையல்காரர் தெரிவித்தார்.மேலும் தனது சொந்த உணவை தன்கையாலே சமைப்பதை அவர் மிகவும் விரும்பினார்.
கேள்வி: அவரது மருத்துவர் என்ன சொன்னார்?
பதில்: பிரபாகரன் அவரது நாசியில் உள்ள விழுதை நீக்க ஒரு சிறிய அறுவை சிகிச்சை மட்டும் செய்துகொள்ள வேண்டும், என அவர் சொன்னார். புதுக்குடியிருப்பில் உள்ள பொன்னம்பலம் மருத்துவமனையில் அது நடத்தப்பட்டது.
கேள்வி: உங்கள் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதி ஜெயவர்தனவின் கருத்து என்னவாக இருந்தது?
பதில்: எல்.ரீ.ரீ.ஈ இந்தியாவுடன் சண்டையிடும் என்று நான் அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் இந்தியாவுக்கு எதிராக போரை ஆரம்பித்தால் எல்.ரீ.ரீ.ஈ அதன் முடிவை 72 மணித்தியாலங்களில் காணும் என்று இந்தியா தன்னிடம் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.
கேள்வி: ஆனால் எல்.ரீ.ரீ.ஈ உடனான போரை இந்தியா வெற்றிகொள்ள தவறிவிட்டதே…..
பதில்: அங்குதான் அவர்கள் தவறிழைத்து விட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈயினை எளிதாக தோற்கடித்து விடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள்.. ஆனால் இந்தியா அப்போது கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை. மொத்தமாக 1.555 இராணுவ வீரர்களை எல்.ரீ.ரீ.ஈ கொன்று குவித்ததுடன் இந்தியா தனது இராணுவ பெருமையையும் இழந்தது. பிரபாகரன் நெத்தியாகுளத்தில் ஒன்று நாலு தளம் என்கிற பெயருடைய ஒரு முகாமை நிறுவியிருந்தார். அவருடைய யுத்தங்கள் யாவும் அஜித் மகேந்திரராஜா என்கிற மாத்தையாவினாலேயே வழி நடத்தப்பட்டன, எல்.ரீ.ரீ.ஈயின் இரண்டாவது தலைவராக அவர் இருந்தார். 1990 க்குப் பிறகு பிரபாகரன் அவரை நீக்கிவிட்டார். அதன்பின் மாத்தையா றோவுடன் உறவுகளை ஏற்படுத்தி பிரபாகரனை அகற்ற சதி செய்தார். அது பிரபாகரனுக்கு தெரிய வந்தது, மற்றும் மாத்தையாவின் உயிருக்கும் முடிவு ஏற்பட்டது.
கேள்வி: ஜனாதிபதி ஜெயவர்தன இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையை கைச்சாத்திட்டது நேர்மையான நோக்கத்துடனா அல்லது வெறுமே இந்தியாவின் அழுத்தங்களினாலா?
பதில்: இந்திய - இலங்கை உடன்படிக்கையை ஜே.ஆர் விருப்பத்துடன் கைச்சாதrajiv_jeyawardana்திட்டார் என்பது தவறான ஒரு கருத்து. இந்தியா ஜே.ஆரை மறைமுகமாக அச்சுறுத்தியது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படாவிட்டால் நாடு மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரும் என அவருக்கு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. இந்தியா மிகப் பெருமளவிலான பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளித்துள்ளது, அவர்களின் மனதில் நாட்டை அழிக்கும் எண்ணம் இருந்தால் அவர்களால் நாட்டை அழித்துவிட முடியும் எனத் தெரிந்தது. அவருக்கு பின்னால் பதவிக்கு வந்த பிரேமதாஸ, டி.பி.விஜேதுங்க சந்திரிகா பண்டாரநாயக்க, மற்றும் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரைப் போலவே ஜே ஆரும், நாட்டை மிகவும் நேசித்தார். அந்த மோசமான தருணத்தில் நட்பு முறையிலான உறவே நாட்டை காப்பாற்றும் என அவர் புரிந்து கொண்டார்.
13வது திருத்தம் ஸ்ரீலங்காவுக்கு பயனற்றது,அது இந்தியாவின் அழுத்தம் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா தனது இன அடிப்படையில் பிளவு படுத்தப்பட்ட ஆட்சிமுறையை ஸ்ரீலங்காமீது திணித்தது. இந்தியாவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கையில் ஸ்ரீலங்காவில் வெறும் 20 மில்லியன் மக்கள் மட்டுமே வாழ்கிறார்கள். ஸ்ரீலங்காவின் முழு குடிமக்களையும் மும்பாயில் குடியமர்த்தி விடலாம். எனவே ஸ்ரீலங்கா போன்ற சிறிய ஒரு நாட்டுக்கு இந்திய முறைமை பொருந்தாது. கூடிய விரைவிலேயே 13வது திருத்தத்தை நாங்கள் ஒழித்துவிட வேண்டும்.
கேள்வி: பிறகு ஏன் ஜனாதிபதி ஜெயவர்தன இந்திய இராணுவத்தை வரவழைத்தார்?
பதில்: ஜே.ஆர் இந்தியாவை அழைக்கவில்லை, ஆனால் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் பயன்படுத்தப்படும் என்று இந்தியா அவருக்கு அறிவித்தது. ஜேவிபியின் அச்சுறுத்தல் காரணமாக இந்திய இராணுவம் இங்கிருப்பதை ஜே.ஆர் விரும்பினார் என சிலர் சொல்கிறார்கள். ஒருவேளை அவர் அப்படி சொல்லியும் இருக்கலாம், ஆனால் உண்மை அதுவல்ல. தங்கள் இராணுவத்தை ஸ்ரீலங்காவில் பயன் படுத்தப்போவதாக இந்தியா சொன்னது, அதை எதிர்க்கும் நிலையில் ஜே.ஆர் இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் தலையீட்டுக்குப் பிறகுதான் ஜேவிபியின் உண்மையான அச்சுறுத்தல் தலைதூக்கியது. அந்த நேரம் ஜேவிபி தன்னை நன்கு அமைத்துக்கொண்டிருந்தது, ஆனால் அவர்கள் சண்டையிட தயாராக இருக்கவில்லை. இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னர் அவர்களிடம் 10 சுடுகலன்கள்தான் இருந்திருக்கும். 1987 ஜூலைக்குப் பிறகுதான் அவர்கள் ஒரு போராட்ட சக்தியாக உருவெடுத்தார்கள்.
கேள்வி: ரவி ஜெயவர்தன எஸ்.ரி.எப் படைப்பிரிவை உருவாக்கியபோது நீங்கள் அவருக்கு நெருக்கமாக இருந்தீர்களா?
பதில்: எஸ்.ரி.எப் படைப்பிரிவை உருவாக்கிய ரவி ஜெயவர்தனவுடன் நான் அத்தனை நெருக்கமாக இருக்கவில்லை. பயங்கரவாதத்துடன் மோதுவதற்கு சாதாரண காவல்துறை படைகள் தகுதியற்றவை, மற்றும் விசேடமாக பயிற்சி பெற்ற காவல்துறை படைகள் இந்தப் பணிக்கு அவசியம் என அவருக்கு யாரோ ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.
இந்தச் சமயத்தில் றிச்சட் கிளாட்டர்பக்; எனும் ஒரு பிரித்தானிய ஜெனரல் ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்தார். பயங்கரவாத அமைப்பை முற்றாக நிர்மூலமாக்கிய முதலாவது நாடு, பிரித்தானிய மலேயா ஆகும். அது கடந்த நூற்றாண்டில் நடைபெற்றது, இந்த நூற்றாண்டில் பயங்கரவாதத்தை துடைத்தழிப்பதை காணும் பாக்கியம்பெற்ற ஒரேநாடு ஸ்ரீலங்கா. மலாயாவில் நடத்திய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் செயற்பாட்டு இயக்குனராக இருந்தவர் இந்த ஜெனரல். நான் அவரை சந்தித்ததுடன் அவரது மரணம்வரை அவருடன் ஒரு நெருக்கமான உறவை பேணி வந்துள்ளேன். ஜெனரல் கொப்பேகடுவ,மற்றும் எனக்கு நினைவில் உள்ளவரையில் அப்போது கேணலாக இருந்த ஜானக பெரேரா, அவர்தான் வந்திருந்த பிரித்தானிய ஜெனரலுக்கு சேவை அதிகாரியாக கடமையாற்றியவர், ஆகியோர் முன்னிலையில் வைத்து ஜனாதிபதி ஜெயவர்தனவுக்கு, ஜெனரல் றிச்சட் நல்ல ஆலோசனைகளை வழங்கியிருந்தார். ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவர் முதல் அந்த இயக்கம் முழுவதையும் முற்றாக அழிக்க வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டினார். 13 நவம்பர் 1989 ல் ரோகண விஜேவீர கொல்லப்பட்டார், மற்றும் 19 மே 2009ல் பிரபாகரன் கொல்லப்பட்டார். இறுதியாக இரண்டு பயங்கரவாத இயக்கங்களுமே முடிவடைந்து விட்டன.
கேள்வி: நீங்கள் ரோகண விஜேவீரவை சந்தித்துள்ளீர்களா?
பதில்: இல்லை நான் ரோகண விஜேவீரவையோ அல்லது கமநாயக்காவையோ சந்தித்ததில்லை. ஜேவிபி யின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களை நான் சத்தித்துள்ளேன்.
கேள்வி: பெரும்பாலும் உங்களை அதிர்ச்சியடைய வைத்தது எது?
பதில்: சிங்கள ஜேவிபி மற்றும் தமிழ் எல்.ரீ.ரீ.ஈ ஆகிய இருவருடைய பிரச்சினைகளுமே ஒரே மாதிரியானவை. அவை பொருளாதார பிரச்சினைகள். தலைவர்கள் தங்களை வடக்கு மற்றும் தெற்கு என்று பிரித்துக் கொண்டாலும், ஆட்சி முழுவதுமாக எதிர்கொண்டது ஒரே மாதிரியான பிரச்சினைகளையே.
கேள்வி: விஜேவீர கொல்லப்பட்டது ஜனாதிபதி பிரேமதாஸவின் அறிவுடனா அல்லது அது ரஞ்சன் விஜேரத்ன என்கிற தனியாளின் தீர்மானமா?
பதில்: விஜேவீர இராணுவத்தால் பிடிக்கப்பட்டதின் பின்னர் காவல் திணைக்களத்தை சேர்ந்த ரொணி குணசிங்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். இது பிரேமதாஸவிற்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் எந்த முடிவையும் எடுக்கவில்லை. கொலை செய்யும்படி பிரேமதாஸ உத்தரவிட்டார் எனச் சிலர் சொல்கிறார்கள் ஆனால் அது தவறு. கொலையாளிகளுக்கு உயிர் வாழ்வதற்கு தகுதியில்லை எனும் உறுதியான முடிவை ரஞ்சன் விஜேரத்ன கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் விஜேவீர பற்றி அவர் முடிவெடுத்தார். பிரபாகரன் மற்றும் விஜேவீர ஆகிய இருவரும் இந்த நாட்டை சீரழித்த தலைவர்கள். ஆனால் அவர்கள் இருவரும் திறமையுள்ள தலைவர்கள். சிறிய அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் இருவருமே கொலையாளிகள் என்பதால் அவர்களது மறைவுக்காக யாராவது அழுது புலம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
(தொடரும்)
Post a Comment