அமெரிக்கா, நயவஞ்சகத்தனமாக செயற்பட்டுள்ளது - ஜப்பான் ஆத்திரம்
ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நட்பு நாடான ஜப்பானிலும் அமெரிக்க உளவுத்துறை ஊடுருவி வேவு பார்த்ததாக செய்திகள் வெளியாயின. இது அமெரிக்காவின் நயவஞ்சகத்தனத்தை காட்டுவதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டு அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் நயவஞ்சகத்தனமாக அமெரிக்கா, ஜப்பானிலும் ஊடுருவி வேவு பார்த்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூயார்க் பத்திரிகைக்கு அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் ஸ்னோடென் வெளியிட்டுள்ள செய்திகளின்படி அமெரிக்காவின் உளவுத்துறையான என்எஸ்ஏ ஜப்பானிலும் ஊடுருவி அதனை வேவு பார்த்துள்ளது அம்பலமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்றில் என்எஸ்ஏவால் 2007ம் ஆண்டு வேவு பார்க்கப்பட்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் உலகின் 3வது பெரிய நாடாக விளங்கும் ஜப்பானின் வெளியுறவுத்துறைக்குள் என்எஸ்ஏ ஊடுருவியுள்ளது கவலை அளிக்க கூடிய ஒன்றாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பாதுகாப்புதுறை அமைச்சர் இட்ஸ்னோரி ஒனோடேரா கூறுகை யில், வெளியான செய்திகளை வைத்து பார்க்கும் போது என்எஸ்ஏ உளவு பார்த்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க அரசு நேரடியாக இதில் ஈடுபடவில்லை என்றாலும், இது விரும்பதக்க ஒன்று அல்ல. இந்த செயல் இருநாடுகளின் நட்புறவையும் பாதிக்கக் கூடிய ஒன்றாகும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜெர்மனிபிரதமர் ஏஞ்சலா மெர்கலின் டெலிபோன் ஒட்டுகேட்கப்பட்டது, பிரேசில் அதிபரின் இமெயில்கள் கண்காணிக்கப்பட்டன. இவை அந்த நாடுகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என ஜெர்மனியும், பிரேசிலும் அமெரிக்காவை எச்சரித்துள்ளன. இதன்காரணமாக வாஷிங்டன் பயணத்தை ரத்து செய்தார் பிரேசில் பிரதமர் தில்மா ரவுசப். தற்போது ஜப்பான் நாட்டிலும் என்எஸ்ஏ கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது உங்களுக்கு இப்போதுதான் புரிகின்றதா அப்படியானால் உங்கள் IQ பின் லாடினின் IQ ஐ குறைவானது.
ReplyDeleteஅமரிக்கா தனிமைப்பட வெகுநாள் இல்லை நாசமாக போற காலம் ஆரம்பித்து விட்டதுஅவர் சொன்னால்போதும் இவர்களெல்லாம் பின்னால் ஓடுவாரkal enna ethu antru kerppathu illai niyayam irunthalum illaawittalum oduwathuthan
ReplyDeleteஅமரிக்கா தனிமைப்பட வெகுநாள் இல்லை நாசமாக போற காலம் ஆரம்பித்து விட்டதுஅவர் சொன்னால்போதும் இவர்களெல்லாம் பின்னால் ஓடுவாரkal enna ethu antru kerppathu illai niyayam irunthalum illaawittalum oduwathuthan
ReplyDelete