கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார், உடனடியாக கிண்ணியாவுக்கு இடமாற்றம்
கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் கிண்ணியா கல்வி வலயத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்த கடிதமொன்று இன்று வியாழக்கிழமை கல்முனை கல்வி வலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை கல்முனை எம்.பி. ஹரீஸ் தலைமையில் முக்கிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. கல்முனை ஸாஹிரா கல்லூரி நிர்வாகம், ஹரீஸ் எம்.பி.யிடம் முன்மொழிந்த 7 கோரிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், இவற்றுக்கு உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதுகாலவரையும் கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளராக இதுவரையும் இருந்துவந்த முக்தார் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்கிரமவுடன் ஹரீஸ் எம்.பி.யும், மாகாண சபை உறுப்பினர் ஜெமீலும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இதையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், கல்முனை பிரதிக் கல்விப் பணிப்பாளராக செயற்பட்டுவந்த முக்தாருக்கு உடனடி இடமாற்றத்தை வழங்கியுள்ளது.
இதன்மூலம் கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் அதன் மகா சபை இணைந்து ஹரீஸ் எம்.பி.யிடன் முன்மொழிந்த 7 கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு எட்டப்பட்டுள்ளதாக அறியவருகிறது.
Post a Comment