இளைஞர் சமூகத்தை சீரமைப்பதில் பெற்றோரின் வகிபாகம்
(SAFRAN BIN SALEEM)
ஒரு குழந்தை பிறந்தது முதல் அதன் ஒவ்வொரு வளர்சிக் கட்டத்திலும் பெற்றோர் தனது குழந்தையை தம்மால் இயன்றளவு அன்பு காட்டி, அயராது உழைத்து ஊட்டி, நல்லது கெட்டது என்பவற்றை சொல்லி கொடுத்து வளர்க்கின்றனர். தாயின் மடிதான் ஒரு குழந்தையின் பள்ளிக்கூடம் ஆகும்.
15 வயது வரை குழந்தையினை தமது கட்டுப்பாட்டில் வளர்கின்றோம். அதன் நல்ல செயற்பாடுகளை ஊக்குவிப்பது மட்டுமல்லாது பிழையான விடயங்களை செய்யும் போது தண்டிக்கவும் செய்கின்றோம்.
இவ்வாறு வளர்கின்ற பிள்ளை சுமார் 15 வயதினை அடைந்த பின்னர் பெற்றோர் அக் குழந்தையினை அதன் விருப்படி வாழ அனுமதிக்கின்றனர். இவ்வளவு காலம் பெற்றோராக, ஆசிரியராக, வழிகாட்டியாக, அன்பு காட்டுபவர்களாக, தவறிழைக்கும் போது தண்டிப்பவர்களாக இருந்து விட்டு அவர்களை சுயாதீனமாக விட்டு விடுகின்றோம்.
உண்மையில் இப்போது தான் அவர்கள் மீது கூடுதல் கவனிப்பும், கரிசனையும் செலுத்தவேண்டும். , ஏனெனில் ஒரு பிள்ளையினது 15 வயதும் அதனை தொடர்ந்துள்ள வயதுகளும் மிகவும் தளம்பலான வயதாகும். அவர்கள் தீய செயற்பாடுகளுக்கு அடிமை ஆக்குவதும் பிழையான வழிக்கு இட்டு செல்வதில் இவ் வயது முக்கிய பங்கு வகிக்கிறது
.
இவ் வயதை பிள்ளைகள் அடையும் போது பெற்றோருக்கு தமது பிள்ளைகள் மீது உள்ள கடப்பாடுகள் சில:
· இப்போது தான் பிள்ளைகள் மீது பெற்றோர் கூடுதல் கவனிப்பும், கரிசனையும் செலுத்தவேண்டும்
· இவ் வயதை பிள்ளைகள் அடையும் போது பெற்றோர் தமது பிள்ளைகளுடன் நண்பர்களை போல பழக வேண்டும். அதன் மூலமே அவர்களது நடவடிக்கைகளினை இலகுவில் கவனிக்க முடியும். பிள்ளைகளும் சகல விடயங்களையும் சகஜமாக கலந்தலோசிப்பர்கள். இவ் வாயதிலுள்ளவர்களுடன் மிக கடுமையான போக்கினை கடை பிடிப்பதை விட்டு விட்டு நட்பான போக்கினால் கடை பிடிப்பது சாலச் சிறந்தது. கடுமையான போக்கை கடைபிடிப்பதால் அவர்களை பிழையான வழிக்கு இட்டு செல்லலாம்.
· குடும்பமாக மதத்துக்கு ஒரு முறையாவது வெளி இடங்களுக்கு சென்று வருதல். இதன் மூலம் பிள்ளைகளை குடும்பத்துடன் நெருக்கமானவர்களாக மாற்றலாம்.
· பெற்றோர் தமது பிள்ளைகளிடம் சம வயது பிள்ளைகளுடன் ஒப்பிட்டு கதைக்க கூடாது. அதாவது அவனை பார். அவன் இப்படி இருக்கிறன். நீயும் அவன் மாதிரி வாழ வேண்டும் போன்ற கருத்துக்கள் பிள்ளையின் மனதில் வஞ்சக தன்மையினை ஏற்படுத்த வாய்ப்பக இருந்து விடும்.
· பிள்ளைகளை திட்டுவதும் அடிப்பதும் அவர்கள் மனதினை பெரிதும் பாதிக்கலாம். அவர்கள் ஏதும் தப்பு செய்தால் அதனை பக்குவமாக பேசி திருத்த வேண்டும். அன்றேல் அவர்களை மேலும் மேலும் அதே தப்ப்பினை அல்லது அது போன்ற தப்பினை செய்யதூண்டும்.
· அவர்கள் குறித்தான முடிவுகளை எடுக்கும் போது நாம் தனியே முடிவெடுத்து தினிக்காமலும். அவர்களை சுயமாக முடி வெடுக்க செய்யாமலும் இருப்பதோடு கலந்துறவாடல் மூலம் முடிவெடுப்பது சால சிறந்தது.
· அவர்களை இரவு நெடுநேரமாகும் வரை வெளியில் சுற்றித் திரிய அனுமதிக்க கூடாது. அவர்களது நண்பர்கள், அவர்கள் செல்லுகின்ற இடங்கள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும்
· சமூக குடும்ப விடயங்களினை பேசும் போது அவர்களது கருத்தை கேட்பதன் மூலமும் அவர்கள் தமக்குள்ள பொறுப்பினை உணர வைக்க முடியும்.
· சமூக விடயங்கள் சம்பந்தமாக நடைபெறம் கூட்டங்கள் கலந்துரையாடல் களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தல் அல்லது அழைத்து செல்லல் இதன் மூலம் அவர்களை சமூக பற்றுள்ளவர்களாக மாற்றலாம்.
· பொது வேலைகளில் அவர்களை ஈடுபட ஊக்கு வித்தல் வேண்டும். இதன் மூலமும் அவர்களை இந்த சமூகத்தின் நல்ல பிரைஜைகளாக மாற்றலாம்.
· இன்னும் பல..............................
Post a Comment