கால்நடை வைத்திய நடமாடும் சேவை
(ஏ.எல்.ஜனூவர்)
கால் நடைகளுக்கான நடமாடும் வைத்திய சேவை நிந்தவூர்-22 ம் பிரிவில் ஜீ.பீ.எஸ். வீதியில் (05.11.2013) காலை இடம்பெற்றது.
இலவசமான மருத்துவ சேவையும் ஆலோசனைகளும், கால்வாய் நோய் தடுப்பூசி ஏற்றல், செயற்கை முறை சினைப்படுத்தல், கர்ப்ப பரிசோதனை, பண்ணையாளர் பயிற்சி வகுப்பு, நாய்;, பூனை விசர்நாய் தடுப்பூசி, கோழிகளுக்கான தடுப்பூசி, கால் நடைகளுக்கான அடையாளமிடல், புற் துண்டங்கள் வழங்குதல் போன்ற சேவைகளை இலவசமாக பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் நிந்தவூர் கால் நடை வைத்திய பிரிவின் அரச கால் நடை வைத்தியர் ஏ.தையுபா, அம்பாரை மாவட்ட கால் நடை வைத்திய பிரிவின் அரச கால் நடை வைத்தியர் ஏ.எல்.எம்.றிப்கான், காரைதீவு பிரிவின் அரச கால் நடை வைத்தியர் எஸ்.ஈ.குணவர்த்தன, நிந்தவூர்- 22 ம் பிரிவின் கிராம உத்தியோகத்தர் யு.எல்.எம்.நசீர், நிந்தவூர் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், வி.ஜெயகாந்தன், நிந்தவூர் கால் நடை வைத்திய காரியாலயத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜுனைனா சாபீர், ஏ.எம்.இர்ஷாம், சில்மி சிபானி, விஸ்ருல் மபாசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வைத்திய சேவையில் அதிகளவிலான கால்நடை பண்ணையாளர்களும், பொதுமக்களும் பங்கு கொண்டு இவ்நடமாடும் வைத்திய சேவையில் திருப்திகரமான சேவையினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment