Header Ads



மன்னார் மாவட்ட விவசாய குழு க் கூட்டம்

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

மன்னார்  மாவட்ட  விவசாய  குழு க் கூட்டம்  மன்னார்  மாவட்டச் செயலாளா்  எம்.வை.எஸ்.தேசப்பிரிய  தலைமையில்  நேற்று (31)  வியாழக்கிழமை  மாவட்டச்  செயலக  கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில்  மன்னார்  மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  திருமதி ஸ்ரான்லி  டிமெல்  கலந்து கொண்டு  விவசாயிகள்  எதிர்நோக்கும் பிரச்சினைகள்  தொடர்பில்   உரிய  அதிகாரிகளிடமும்  விவசாயிகளிடமும் கேட்டறிந்து கொண்டார்.  குறித்த  விடயம்  தொடர்பாக  சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தமது  திணைக்களங்களினால்  முன்னெடுக்கப்பட்டு  வரும் செயற்திட்டங்கள்  பற்றி  மேலதிக  அரசாங்க  அதிபரிடம்  தெளிவு படுத்தினர்.

விவசாயிகளின்  பிரச்சினைகளை  கவனத்தில்  எடுத்து  கொண்ட  மேலதிக அரசாங்க  அதிபர்  விவசாயிகளின்  பிச்சினைகளுக்கான  தீர்வுகள்  தொடர்பில் விரிவாக  ஆராய்ந்து  எடுக்கப்பட  வேண்டிய  நடவடிக்கைகள்  தொடர்பில் அரசாங்க  அதிபரின் க வனத்திற்கு  கொண்டுவந்தார்.

 திவிநெகும , செயற்திட்டம்,  காலபோக  நெற்  பயிர்ச் செய்கை  2013-2014  ஆண்டுகளில் எதிர் நோக்கும்  பிரச்சினைகள்,  கால் நடை,  நீர்ப்பாசனம்,  விவசாயம்  மற்றும் கால்நடைகளுக்கான  காப்புறுதிகள்,  வங்கிக்கடன்  தொடர்பான  விடயங்கள் விரிவாக ஆராயப்பட்ட நிகழ்வில்  அரச உயர்  அதிகாரிகள்,  விவசாய அமைப்புகள்  மற்றும் பிரதேச செயலாளர்கள், வங்கி பிரமுகர்கள் உட்பட பலா் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.