அப்துல் ரசாக் மீண்டும் வந்தார்
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான "டுவென்டி-20' தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் அப்துல் ரசாக், சோயப் மாலிக் இடம்பெற்றுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ள தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 5 ஒரு நாள், 2 "டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. இதன் 3வது போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில், "டுவென்டி-20' போட்டிக்கான (நவ.,13, 15) பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில், "ஆல்-ரவுண்டர்களான' அப்துல் ரசாக், சோயப் மாலிக் மீண்டும் வாய்ப்பு பெற்றனர். கடைசியாக ரசாக், கடந்த 2012ம் ஆண்டு இலங்கையில் நடந்த "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் ரசாக் விளையாடினார். இதன் பின் கேப்டன் முகமது ஹபீசுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அணியில் இடம்கிடைக்கவில்லை.
இதே போல, சோயப் மாலிக் கடைசியாக இங்கிலாந்தில் நடந்த சாம்பயின்ஸ் டிராபியில் பங்கேற்றார். ஆனால், உள்ளூர் போட்டியில் திறமை நிரூபித்தார். வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் அணியில் இடம் பெறவில்லை. கடந்த மே மாதம்தான் இவர் முழங்கால் காயத்திற்கு "ஆப்பரேஷன்' செய்து கொண்டார்.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வெளியிட்ட அறிக்கையில்,'' அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நடக்கும் உலக "டுவென்டி-20' தொடரில் சாதிக்கும் வகையில் ரசாக், சோயப் மாலிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"டுவென்டி-20' அணி விவரம்:
முகமது ஹபீஸ் (கேப்டன்), ஜாம்ஷெத், அகமது சகாத், உமர் ஆமின், உமர் அக்மல், அப்ரிதி, சோயப் மாலிக், அப்துல் ரசாக், மக்சோத், தன்வீர், முகமது இர்பான், ஜுனைடு கான், சயீத் அஜ்மல், அப்துல் ரஹ்மான்.
Post a Comment