ஹம்பாந்தோட்டை ராஜபக்க்ஷ விமான நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட தற்காலிக தடை
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஹம்பாந்தோட்டை மத்தள ராஜபக்க்ஷ சர்வதேச விமான நிலையத்தை பொதுமக்கள் பார்வையிடுவது தற்காலிகமாத்தடைசெய்யப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் எதிர் வரும் 18 ஆம் திகதி வரை இத்தடை அமுலில் இருக்கும் என விமான நிலைய உயர் அதிகாரியொரிவர் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் நாளாந்தம் இவ்விமான நிலையத்தை பார்வையிட்டு வருகின்றனர். எதிர்வரும் நாட்ளில் பொதுநலவாய இளைஞர்கள் மாநாடு ஹம்பாந்தோட்டையில் நடைபெறுவதையொட்டி உலகின் பல பாகங்களிலிருந்தும் பிரமுகர்கள் மற்றும் சர்வதேச இளைஞர்கள் இங்கு வரவுள்ளமையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இத்தற்காலிகத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment