பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்ற பிரியாவிடையும், வரவேற்பும்
(பி. முஹாஜிரீன்)
பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் நான்கு வருடங்களாகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர் ஐ.எம். பாஹிம் மற்றும் இப்பாடசாலையில் புதிய அதிபராக கடமையேற்றுள்ள அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் ஆகியோருக்கு நடைபெற்ற பிரியாவிடை மற்றும் வரவேற்பு வைபவம் நேற்று (13) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் பிரதி அதிபர் பி. முஹாஜிரீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கலை, கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன.
அதிபர் ஐ.எம். பாஹிம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நினைவுச் சின்னம் மற்றும் வழ்த்துப் பத்திரங்கள் வழங்கிக்; கௌரவிக்கப்பட்டதுடன் அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் வரவேற்புச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.
அதிபர் ஐ.எம். பாஹிம் இங்கு உரையாற்றுகையில், இப்பாடசாலை என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடசாலையாகும். இங்குள்ள ஆசிரியர் குழாத்தின் ஒற்றுமையைக் கண்டு நான் வியந்துள்ளேன். மாணவர்களின் பண்புகளும் நடத்தையும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன. இப்பாடசாலை எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகள் படைத்து வெற்றிபெற உளமாற வாழ்த்துகின்றேன். மாணவர்கள் எப்போதும் கல்வியை ஆர்வத்துடன் கற்க வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு முன்னேற வேண்டும். அதற்காக என்னாலான பங்களிப்புக்களை எப்போதும் செய்வதற்குத் தயாறாகவுள்ளேன் எனக் கூறினார்.
அதிபர் எம்.எச். அப்துல் றஹ்மான் இங்கு உரையாற்றுகையில், நான் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் என்னை அர்ப்பணித்துச் செயலாற்ற எப்போதும் சித்தமாக உள்ளேன். இப்பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் என்னாலான முயற்சிகளைச் செய்து இப்பாடசாலையை முன்னேற்ற பாடுபடுவேன் எனக் கூறினார்.
Post a Comment