சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைந்தவர்களுக்கு நிரந்தர நியமனம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 57 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இன்று புதன்கிழமை (06) நிரந்தர நியமனம் செய்யப்பட்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நியமனம் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஏ.பஸீர், ஏ.நிஸார்தீன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஏ.எம்.ஏ.ஜின்னா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை, பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி.எம்.பளீல் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment