முஸ்லிம் மாணவி எமக்கு பெருமை தேடித் தந்துள்ளார் - முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா
மக்கள் வங்கியின் அனுசரணையுடன் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தலைமையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மாகாண,மாவட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளியைப் பெற்ற மாணவியையும், மடவளை அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து சித்தியடைந்த 17 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் (7.11.2013) மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம் பெற்றது.
அங்கு உரையாற்றிய மத்திய மாகாண கல்வி அமைச்சரும் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்கா தெரிவித்ததாவது,
மத்திய மாகாணத்தில் ஐ.தே.க. ஆட்சியில் இருந்த சமயம் பாடசாலைகள் மூடப்பட்டன. இன்று புதிதாகப் பாடசாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கூற்றுப் படி நல்லதையே நம் குழந்தைகளுக்குச் செய்யவேண்டும். அப்படி என்றால் நல்லது கல்வியாகும். எல்லா மாணவர்களாலும் கற்ற முடியும். ஆனால் எல்லா மாணவர்களாலும் டாக்டர்களாகவோ பொறியிலாளர்களாகவோ முடியாது.
எனவே சகலமாணவர்களையும இணைத்துச் செல்லக் கூடிய வித்தில் தற்போது மகிந்தோதயத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு தோரும் குறைந்தது இரண்டு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இவை வெறுமனே பெயர் பலகைக்கு மட்டும் மட்டுப் படுத்தப்பட்ட பாடசாலைகள் அல்ல. இவற்றுக்கான பௌதீக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கணித விஞ்ஞான பாடங்களில் பின்னடைவு காட்டுபவாகள் கூட பல்கலைக்கழக மட்டத்திலான பட்டத்தை பெறும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
அண்மைகாலமாக நகரப் புறங்களைவ விட கிராமப்புற மாணவர் மத்தியில் கல்வியில் எழுச்சி காணப் படுகிறது. அதற்குக் காரணம் கிராமப் புறங்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டமையாகும். அந்த அடிப்படையில் மடவளை அல் முனவ்வரா மாணவி ஹூதா பர்ஹத் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மத்திய மாகாணத்திலும் கண்டி மாவட்டத்திலும் தமிழ் மொழி மூலம் 190 புள்ளிகளைப் பெற்று எமக்குப் பெருமை தேடித் தந்துள்ளார் என்றார்.
குற்பித்த ஆசிரியர்கள் சித்தியடைந்த மாணவர்கள் இவ்வைபவத்தில் விருதும் பரிசும் வழங்கிப் பாராடடப்பட்டனர்.
Post a Comment