டுபாயிலிருந்து சிறாஸ் அவர்களுக்கு..!
(AMR Dubai)
நிசாம் காரியப்பரை விட பல மடங்கு சிறந்தவராகத்தான் நாங்கள்(கல்முனை மக்கள்) உங்களைப் பார்த்தோம்... நாங்கள் நிசாம் வேண்டும் என்று டயர் போடவுமில்லை ஹர்த்தால் போடவுமில்லை.
ஏனென்றால் அந்த இடத்தை நிரப்பப்போவது சிறாஸ் மீராசாஹிப் என்கிற ஒரு ஜெண்டில்மேன் என்றுதான்... சத்தியமாக என்னைப்போல் தான் கல்முனையை சேர்ந்த பெரும்பான்மை மக்கள் விரும்பினார்கள் கல்முனையைப்பொறுத்தமட்டில் election வரைக்கும் 100 பேருக்குகூட சிறாஸ் என்றால் யாரென்று தெரியாது ஆனால் 1 மாத காலத்துக்குள் 5000 வாக்குகள் கிடைத்ததென்றால் அது மிகப்பெரியதொரு தொகையாகும் அதுமட்டுமல்ல உங்கள் செல்வாக்கு கல்முனையில் இன்னும் உயர்ந்துகொண்டே போனது எந்த அளவுக்கென்றால் மீதி 2 வருடத்தையும் நிசாமை விட சிறாஸ் தான் தொடர வேண்டும் எனும் அளவிற்கு...
ஆனால் இன்றைய நிலை..???
”இந்த பதவி மக்களுக்குரியது மக்கள்தான் தீர்மாணிக்க வேண்டும்” என்று சொல்வதற்குப் பதிலாய்..
”இது சாய்ந்தமருது மக்களுக்குரியது சாய்ந்தமருது மக்கள் தான் தீர்மாணிக்க வேண்டும்” என்ற இரண்டே வரிகளால் எங்கள் மனங்களை இரண்டாய் உடைத்து விட்டீர்கள் எங்களை மாற்றாந்தாய் மக்களாக அந்நியப்படுத்திவிட்டீர்கள்
நீங்களும் பதவிக்காக இவ்வளவு கீழ்த்தரமான அரசியல் யுக்தியை கையாளுவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை மாறாக எல்லா ஊர்மக்களினதும் மனங்களை வென்ற ஒரு புரட்சி நாயகனாக திகழ்வீர்கள் என்று நினைத்தோம்.
உங்கள் கணவான் அரசியலில் கை கோர்க்க காத்திருந்த எங்கள் கைகளை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு மிகக்கேவலமான அரசியல் யுக்தியை கையாள யார் உங்களுக்கு ஐடியா தந்தார்களோ அவர்கள் தான் உங்கள் அரசியல் எதிரிகள் என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள் அல்லது விரைவில் உணர்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.
AMR அவர்களே, நிசாம் காரியப்பரையும் நேற்று வந்த இந்த சிராசையும் நீங்கள் ஒப்பிடுவது உங்களது அரசியல் அனுபவத்தின் சிறு பிள்ளை தனத்தை காட்டுகிறது. முதலில் உங்கள் கருத்தை கல்முனை மக்கள் கருத்தாக எழுதுவதை நிறுத்துங்கள்.
ReplyDeleteநிசாம் காரியப்பரை நாங்கள் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அரசியலுக்கும் இந்த கட்சியை பாதுகாத்து வழிநடத்தும் ஒருவராக பார்க்கின்றோம். அதற்கான முழுத்தகுதியும் திறமையும் அவரிடம் உண்டு.
இந்த கல்முனை தொகுதி மக்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள், இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அடித்தலமே இந்த தொகுதிதான் தயவு செய்து தனி நபர்களின் அரசியல் நலனுக்காக, பிரதேச வாதத்தை தூண்டி முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தை பலவீனபடுத்தாதீர்கள். எவராவது ஒருவர் மேயராக இருந்து விட்டு போகட்டும் அதை கட்சியிடம் விட்டுவிடுவோம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
நண்பா உண்மைய பட்டு பட்டுண்ணு புட்டு புட்டு வைச்சிட்ட.. யு ஆர் கிரேட்
ReplyDeleteகாரியப்பர் இருந்தாலும் சரி மீரசாஹிபு இருந்தாலும் சரி ஏன் இரண்டு முஸ்லிம் ஊரையும் பிரித்து பார்க்கிறீர்க சாந்தமருத மக்கள் கல்முனையிலும் கல்முனை மக்கள் சாய்ந்தமதுரைலும் திருமணம் முடித்து அங்கும் இங்கும் உறவாடிக்கொண்டு இருக்கும் மக்களை சண்டை உண்டாக்குகிறார்கள் இந்த அரசியல்வாதிகள் .கூடிப்போனால் இரண்டு வருடம் .கொஞ்சமாவது யோசிக்க மாட்டார்களா இவர்கள் ?
ReplyDelete