இஹ்வான்களை கண்டு அஞ்சி நடுங்கும் ஐக்கிய அரபு இராச்சியம்
சட்டவிரோதமான முறையில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையை உள்நாட்டில் நிறுவியதாக குற்றம் சாட்டப்பட்ட 30 இஸ்லாமியவாதிகளுக்கு எதிரான வழக்கு ஐக்கிய அரபு இராச்சிய தேசிய பாதுகாப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
20 எகிப்தியர் மற்றும் 10 ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்தவர்கள் மீது பாதுகாப்புச் சேவையின் இரகசியங்களை திருடியதாகவும் அனுமதி இன்றி நன்கொடைகளை சேகரித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கும் பிரதிவாதிகள், தாம் சிறையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னதாக நாட்டின் அரசியல் முறையை கலைக்க சதி செய்ததாக கடந்த ஜுலையில் 69 இஸ்லாமியவாதிகள் ஐக்கிய அரபு இராச்சிய நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
இதில் மனித உரிமை பாதுகாவலர் மற்றும் வழக்கறிஞர் உட்பட குற்றம் சுமத்தப்பட்டோர் மீதான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் அபூதாபி தேசிய பாது காப்பு நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசியல் சமூக அமைப்பான அல் இஸ்லாஹ்வுடன் தொடர்புபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டது. இந்த அமைப்பு எகிப்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையென அரச வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள அல் இஸ்லாஹ் அமைப்பு, தாம் அமைதியான சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் சகோதரத்துவ அமைப்புடன் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும் தாம் சிறையில் துன்புறுத்தலுக்கு முகம்கொடுத்ததாகவும் பல மாதங்களாக சட்ட உதவி பெற மறுக்கப்பட்டதாகவும் பிரதிவாதிகள் குற்றம்சாட்டினர்.
கடந்த ஜுலையில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட் டோரும் இதே குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஐக்கிய அரபு இராச்சியத்தின் நீதித்துறை செயற்பாடுகள் குறித்து மனித உரிமை கண்காணிப்பகம் தமது கவலையை வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எகிப்தில் 2011 மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் சகோதரத்துவ அமைப்பின் எழுச்சி குறித்து ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பெரும்பாலான வளை குடா நாடுகள் கவலை அடைந்திருந்தன. எனினும் அந்த அமைப்பைச் சேர்ந்த ஜனா திபதி மொஹமட் முர்சி இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஐக்கிய அரபு இராச்சியம் எகிப்து இடைக்கால அரசுக்கு 3 பில்லியன் டொலர் நிதியுதவியை அளித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment