அக்கரைப்பற்று அல்-ஹிதாயா மாணவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர் (படங்கள்)
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற அக்கரைப்பற்று அல்-ஹிதாயா வித்தியாலய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் இன்று(14) வித்தியால முன்றலில் இடம்பெற்றது.
அதிபர் அல்-ஹாஜ் எஸ்.எம்.ஆதம்லெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிரதம அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளர் அஷ்-ஷேய்க ஏ.எல்.எம்.காசிம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தவிசாளர் எஸ்.லாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.அஹமட் கியாஸ் மற்றும் உதவிக்கல்விப்பணிப்பாளர்களான கே.எல்.ஏ.மஜீட் ஏ.எச்.ஏ.பௌஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்பெற்று தேர்ச்சி பெற்றவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்ற தமிழ் முஸ்லிம் மாணவர்களும் பாராட்டி நினைவுச்சின்னங்கள் மற்றும் பாராட்டுப்பத்திரங்கள் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் சமய கலாசார விழுமியங்களைப் பிரதிபரிக்கும் வகையில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment