ஓட்டமாவடி மாஞ்சோலை இளைஞர்களின் முன்மாதிரி (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குற்பட்ட மாஞ்சோலை 207ஏ கிராம சேவைப்பிரிவின் பதுரியா நகர் கிராமத்தில் ஜெய்கா திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுனுளு வீதியின் சிறு பகுதி வடிகான் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருத்தது.
இது இவ்வாறு இருக்க அவ்வடிகானுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியானது இக்கிராமத்தின் பாடசாலை மாணவர்களும்,சிறுகைத்தொழில் முயற்சியாளர்களும்,விவசாயிகளும்,தமிழ்,முஸ்லிம்கள் என பலரும் பயன் படுத்தும் பிரதான வீதியாகவும்,இன நல்லுறவு பாதையாகவும் காணப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் பல தடவைகள் பிரதேச சபைக்கு அறிவித்தும் பயனளிக்கவில்லை இதனை கருத்தில் கொண்ட பிரதேச இளைஞர்கள் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் வடிகானுக்காக ஒதுக்கப்பட்டு மக்களுக்கு பல அசௌகரியங்களை தரும் வகையில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு போக்குவரத்துக்கு தடையாக அமைத்திருத்த கொங்ரீட்; கற்களை கொண்டு வீதியின் சிறு பகுதியை முழுமையாக நிரப்பி செப்பனிட்டனர்.
இப்பிரதேச இளைஞர்கள் இப்பணியினை மேற் கொள்வதை பார்வையிட்ட பிரதேச மக்கள் வியப்படைத்தனர். இளைஞர்களா? பொறுப்புடன் செயற்படுவதென்று சிந்திந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 வருட யுத்தத்தினை நிறைவுக்கு கொண்டு வந்த பிற்பாடு எமது நாட்டின் எப்பகுதியிலும் சுதந்திரமாகவும்,எவ்விதமான வீதி தடைகள் இல்லாமல் பயனிக்க முடியும் என்று கூறி இருத்தார்கள். ஆனால் எமது கிராமத்தில் அகழிகளை தோன்டி வைத்துள்ளனர் இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். சிறுவர்கள் கூட வீழ்ந்து காயங்களும் ஏற்பட்டுள்ளதாகம், இதனை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில்
எமது தாய் நாட்டினை நிருவகிப்பதற்கும்,அபிவிருத்தியின் இலக்கினை நோக்கி கொண்டு செல்வதற்கு சிங்கம் ஒன்று இருக்கும் வேளையில் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை நாட்டில் இளைஞர்களாகிய நாங்கள் எமது அபிலாசைகளையும்,உரிமைகளையும் வென்றிட முடியும் எனவும்,எமது பிரதேசத்தில் இவ்வாறான பல பிரச்சினைகள் காணப்படுகின்றது இதனை முடிந்தளவு பிரதேசத்தின் இளைஞர்களுடைய ஒத்துழைப்புடன் மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளதாகவும்,அதற்கான ஒத்துழைப்பினை சகல அதிகாரிகளும் தந்துதவ வேன்டும் எனவும், இவ்வாறான சமூக பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதற்கு அனைத்து ஊடகங்களும்,ஊடகவியலாளர் நண்பர்கள் தந்துதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மறுமைக்குரிய வைப்பீடு அல்ஹம்துலில்லாஹ் உங்கள் எல்லோரினதும் பாவங்களையும் உங்கள் பெற்றோரின் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்தருளுவானாக ஆமீன் .
ReplyDelete