Header Ads



இலங்கையில் பொதுநலவாய மாநாடு - அரசாங்கம் விழி பிதுங்கி போய் இருக்கிறது

இந்த அரசாங்கம் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடத்தி கொள்ளையடிக்கும் சந்தர்ப்பத்தைதான் முதலில் கேட்டது. அதை மறுத்த பொதுநலவாய அமைப்பு இன்று இவர்களுக்கு பொதுநலவாய அரசு தலைவர்கள் மாநாட்டை தந்துள்ளது. 

இந்த சந்தர்ப்பத்தை கேட்டு வாங்கி பொறியில் சிக்கிக்கொண்டு அரசாங்கம் இன்று விழி பிதுங்கி போய் இருக்கிறது. அரசின் உயர்பீடம் இப்போது இந்த உண்மையை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் வைத்து கொண்டு தவிக்கிறது. தேள் கொட்டு வாங்கிய திருடனை ஆட்சி தலைமை முழிக்கிறது. 

ஆனால் ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபல சேனா, ராவண பலய, தேசிய தேசபக்தி இயக்கம் போன்ற அரசின் கூட்டாளிகள் இதை உணர்ந்து பகிரங்கமாகவே கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

பொதுநலவாய மாநாடு நடந்து முடிந்த பின்னர், இந்த அமைப்பின் தலைமை நாடாக இலங்கையே இருக்க போகிறது. இது இலங்கைக்கு கிடைத்த விசேட வரப்பிரசாதம் அல்ல. அதுபோல் இது இலங்கை ஜனாதிபதிக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் விசேட அந்தஸ்தும் அல்ல. இது ஒரு சம்பிரதாயம். 1976 ல் அணி சேரா நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெற்ற பின் அந்த அமைப்பின் தலைமை பதவி இலங்கைக்கு கிடைத்தது. 

அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக அதற்கு தலைவராக இருந்தார். ஆனால் 1977 தேர்தலில் அவரது அரசு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அந்த பதவி புதிய இலங்கை பிரதமர் ஜேஆர். ஜெயவர்தனவுக்கு கிடைத்தது. அடுத்த வருடம் நடுப்பகுதியில் இந்த அரசு வீழ்ச்சியடையும். அதன்பிறகு இந்த பதவி நமது புதிய அரசாங்கத்தின் தலைவருக்கு வழங்கப்படும். இது நடக்கப்போகிறது. 

அதைவிட முக்கியமானது இந்த மாநாட்டுடன் இலங்கை பற்றிய சர்வதேச அவதானம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கப்போகின்றது. பொதுநலவாய அமைப்பின் தலைமை நாடு என்ற முறையில் இந்த நாட்டு அரசாங்கம் பல கடப்பாடுகளை நிறைவேற்ற கடமைபட்டுள்ளது. 

சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், ஊடக சுதந்திரம் ஆகியவை தொடர்பில் பொதுநலவாய பிரகடனத்தை மீறி செயல்பட முடியாது. சட்டத்தின் முன்னால், அரசாங்க தலைமைக்கு நெருக்கானவர்கள் என்ற கூறிக்கொண்டு சிலர் சலுகை பெற முடியாது. அதுபோல், ஊடகங்களில் அரசுக்கு எதிராக எழுதப்படுமானால், அந்த ஊடகங்களை தொலைபேசியில் அழைத்து மிரட்ட முடியாது . அதுபோல் ஆள் கடத்தல், படு கொலை கலாச்சாரம் ஆகியவற்றை முன்னெடுக்க முடியாது . அது மட்டும் அல்ல, நடை பெற்று முடிந்த கடத்தல், காணாமல் போதல், படுகொலைகள் ஆகியவற்றுக்கு இனி வருகாலத்தில் இந்த அரசு பதில் கூறியாக வேண்டும். 

தலைமை பதவியை கையில் வைத்து கொண்டு இந்த அரசு மாநாட்டுக்கு பிறகு, கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் திருட்டு பூனை போல் நடக்க முடியாது. அப்படி நடக்குமாயின் இந்த அரசிடமிருந்து தலைமை பதவி பறிக்கப்பட்டு, இந்த நாடு பொதுநலவாய அமைப்பிலிருந்து வெளியேறும் நெருக்கடி நிலைமை ஏற்படும். 

ஆகவேதான் பொதுநலவாய மாநாடு என்பது ஒரு பொறி. மகிந்த ஆட்சி என்ற எலிக்கு வைக்கப்பட்டுள்ள எலிப்பொறி. இவர்களது பாஷையில் சொன்னால், மேற்கத்திய நாடுகள், ஏகாதிபத்தியவாதிகள், வெள்ளைகார்களும், இந்தியர்களும் சேர்ந்து வைத்துள்ள பொறி. இதைதான் இப்போது ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, பொதுபல சேனா, ராவண பலய, தேசிய தேசபக்தி இயக்கம் போன்ற அரசின் கூட்டாளிகள் சொல்லி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். 


2 comments:

  1. அடக்குமுறைக்குள் சிக்குண்டு கிடக்கும் அறசியல் வாதிகள் ஏறாலம்!!!!!
    கூண்டுக்குள் போட்டு அடக்கியால முடியாத ஒரு சிறுத்தை புளி இதோ!!!
    தைரியமாய் எதையும் எடுத்துறைக்கும் சினுங்காத புளியும் இதோ!!!

    ReplyDelete
  2. அதிகமானவர்களுக்கு இந்த உண்மை தெரியாதே. ஆப்பிழுத்த குரங்குக் கதையோ இது. நல்லது. பொது பல சேனா கக்கும் போய்களையாவது தட்டிக் கேட்க முடியுமே.

    ReplyDelete

Powered by Blogger.