உள்ளூராட்சித் தேர்தல்கள் இனிமேல் விருப்பு வாக்கு முறையில் நடைபெறாது, வட்டார முறைக்கு தயாராகுங்கள் - அதாஉல்லா
(ஜே.எம். வஸீர்)
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் 45 மில்லியன் ரூபா செலவிலும், அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும திட்டத்தின் மூலம் 40 மில்லியன் ரூபா செலவிலும் 10 உள்ளுராட்சி சபைகளுக்கு கெப் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் கலிபௌசர் போன்றவற்றை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களிடம் கையளித்தார். இந்நிகழ்வு இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவகத்தின் கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க தலைமையில் நடைபெற்றது.
இவ்வாறான வாகனங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு கையளிக்கப்பட்டதன் மூலம் பல ஆண்டுகள் தாம் வாகனங்களின்மையால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அதற்கு தற்போது நிரந்தரத் தீர்வு கிடைத்துள்ளதாகவும் பெற்றுத்தந்த அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் உள்ளுராட்சி நிறுவனத் தலைவர்கள் தெரிவித்தனர்
இவ்வாண்டுக்குள் 80ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு வாகனங்கள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா,
வாகன வசதியின்றி பெரும் கஷடத்திற்குள்ளான சபைகளாகவே நான் இச்சபைகளைக் காண்கின்றேன். இவ்வாகனங்களைப் பெற்றதன் மூலம் மக்களுக்கு மேலும் சிறந்த சேவைகளை வழங்குவிர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
மேலும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் வட்டார அடிப்படையிலேயே நடைபெறவுள்ளது. இனிமேல் நமது நாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்கள் விருப்பு வாக்கு முறையில் நடைபெறமாட்டாது. ஏனவே; வட்டார முறைக்கு உள்ளூராட்சி மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் தயாராகவும் வேண்டும், மக்களின் அபிமானத்தையும் பெறவும் வேண்டும், இன்னும் நீங்கள் மக்களுக்காக மேலும் உழைக்கவும் வேண்டும். அப்போதுதான் வட்டாரத்தில் உங்களுக்கு வாக்களிக்கும் மக்கள் உங்களைக் கவருவார்கள். மேலும் எமது அமைச்சு எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கு இன்னும் பல வாகன வசதிகளை செய்து கொடுக்க தயாராகவுள்ளது எனவும் அமைச்சர் தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க, உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ. ஹமீட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொறியியலாளர் எம்.எஸ். நஸீர், புறநெகும செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஆனந்த கமகே மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளும் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளரகள் உள்ளிட்ட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment