வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனத்துவேசத்துடன் நோக்கும் மனநிலை, இன்னும் தமிழ் தேசியவாதிகளிடம் குடிகொண்டுள்ளது
கடந்த ஆண்டுகளாக வட மாகாண முஸ்லிம்களின் இனசுத்திகரிப்பை ஆண்டுதோறும் ஒக்டோபர் இறுதி வாரத்தில் 'கருப்பு ஒக்டோபர்' என்ற நாமத்தில் நாம் (Sri Lanka Muslim youth forum) அனுஷ்டித்து வந்துள்ளோம்.
கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டு போஸ்டர்கள் ஒட்டியும் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் வடக்கு முஸ்லிம் இனச் சுத்திகரிப்பை (கருப்பு ஓக்டோர்-23-) சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்வுபூர்வமாக பகிரங்கமாக அனுஷ்டிக்க முடியவில்லை. கருப்பு ஓக்டோர்-23 நிகழ்வுபூர்வமாக அனுஷ்டிக்கவில்லை என்பதை காரணமாக கொண்டு கருப்பு ஒக்டோபர் இனியும் அனுஷ்டிக்ப்படாது அதற்கான தேவை இல்லை என்ற புரிதலை எவரும் பெற்றுவிட முடியாது .
வடமாகாண முஸ்லிம்களின் அவலங்கள் முடிவின்றி தொடர்கிறது , வடக்கில் எங்கும் ஆரோக்கியமான முஸ்லிம் மீள்குடியேற்றம் இன்னும் இடம்பெறவில்லை, இழந்தவைகளுக்கு எவரும் இழப்பீடுகளை வழங்க முன்வரவில்லை, அகதி வாழ்க்கை தொடர்கிறது , அரசாங்கமும் , தமிழ் அரசியல் தரப்பும் வடக்கு முஸ்லிம்களுக்கு ஆக்கபூர்வமாக எதையும் இன்னும் செய்துவிடவில்லை- பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு இன்னும் மறக்கப்படவுமில்லை மன்னிக்கப்படவுமில்லை . அது நீர்பூத்த நெருப்பாக இன்னும் வடமாகாண முஸ்லிம்களின் உள்ளங்களில் இருக்கின்றது.
அனைத்து இழப்புக்களின் பின்னரும் வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை இனத் துவேசத்துடன் நோக்கும் மனநிலை இன்னும் பல தமிழ் தேசியவாதிகளிடம் குடிகொண்டுள்ளது. இது சந்தர்ப்பவாதமற்ற உண்மையான உளப்பூர்வமான மாற்றத்துக்கு உள்ளாகவேண்டும். அதேவேளை மிதவாத தமிழ் தேசியவாதிகள் முஸ்லிம் மக்களுடன் இனக்கப்பாட்டுக்கான சமிக்கைகளை வெளிபடுத்தும் நிலை வரவேற்கப் படவேண்டியது.
கடும்போக்கு அல்லது தீவிர தமிழ் தேசியவாதிகளில் முஸ்லிம் மக்கள் தொடர்பிலான இனவிரோத செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. புதிய புரிதலையும் அணுகுமுறைகளையும் கொண்டு தமிழ் , முஸ்லிம் மக்கள் சகவாழ்வை எதிர்கொள்ளவது காலத்தின் தேவையாகும் . ஒக்டோபர்கள் மறக்கப்படமுடியாதவை. ஒக்டோபர்கள் கடும்போக்கு, தீவிரவாத மனநிலையில் மாற்றங்களை வேண்டிநிற்கிறது.
மொஹம்மத் சர்ராஜ்
செயலாளர் -ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் போரம்
Post a Comment