அத்தே ஞானசார தேரரின் சவால்..!
இலங்கையில் கசினோ வர்த்தகம் ஆரம்பிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கும் தரப்பினர் அதற்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை காண முடியவில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தினார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை குறிப்பிட்டார்.
ஊடக சந்திப்புகளை நடத்தி கசினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் மட்டும் போதாது. கசினோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலுக்கு மக்களை அழைத்து வரவேண்டும்.
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்குமாறு கசினோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கின்றோம்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் கசினோ நடவடிக்கைகள் நிறுத்தப்படுமா என்பதை அந்த கட்சி பகிரங்மாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அறிக்கையை பார்த்தல் பெரியதோர் அரசியல் பின்னணி இருக்கிறமாதிரி இருக்கு .யுஎன்பியை மாட்டி விர்ர ஐடியா .ஏன் அவர் முதல்ல காலிமுக திடல்ல அவர்ர படைய கூட்ட வேண்டியதுதான ?பன்சலைல ஓசில பால்சோறு சாப்பிட்டுட்டு இருக்கிரவனுக்கல்லாம் அதற்க்கு அரசியல் .
ReplyDelete