'சுரகும' ஓய்வூதியத் திட்டத்தில் இணையுமாறு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் அழைப்பு
'சுரகும' ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு விவசாயிகளுக்கும் மீனவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை சமூகப் பாதுகாப்புச் சபை விடுத்துள்ளது,
இது குறித்து அதன் தலைவர் சுமன ஆரியதாச தெரிவித்ததாவது,
சமூகப் பாதுகாப்புச் சiயில் ஏறக்குறைய 4 லட்சத்து 50 ஆயிரத்து 588 பேர் அங்கத்தவர்களாகவுள்ளனர். இவர்களில் 14 ஆயிரத்து 684 பேர் ஏற்கனவே மாதாந்தம் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர்.
அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துகொள்ளதாக 18 வயதுக்;கும் 59 வயதுக்குமிடைப்பட்ட விவசாய மற்றும் மீனவத் தொழில் ஈடுபடுகின்றவர்கள் சுரகும ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும்.
இந்த ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் தங்களுக்கான அங்கத்துவத்தினை சமூகப் பாதுகாப்புச் சபையின் ராஜகிரியவிலுள்ள தலைமைக் காரியத்திலலோ அல்லது மாவட்டக் காரியாலயங்களிலோ தங்களைப் பதிவு செய்துகொள்வதன் மூலம் அங்கத்துவத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
சமூகப்பாதுகாப்பு மற்றும் அதன் நலன் தொடர்பில் பொது மக்களை விழிப்பூட்டும் நோக்குடன் கடந்த ஒக்டோபர் மாதம் சமூகப் பாதுகாப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அத்துடன், இலங்கையில் 60 வயதையும் கடந்த 2,468,329 முதியவர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த சனத்தொகையில் முதியவர்களின் சராரியானது 12.2ஆகும். 2025ஆம் ஆண்டளவில் இந்த சராசரியானது 24.4ஆக அதிகரிப்பதுடன் 2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் முதியவர்களின் சாராசரி 29 வீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், மஹிந்த சிந்தனை எதிர்கால அபிவிருத்தித்திட்டத்திற்கமைய சகலருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்த ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ஊடகவியலாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சமூகப் பாதுகாப்பு சபையின் தலைவர் ஆரியதாச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment