கொழும்பில் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு - வீதிகளுக்கு விடுமுறை இல்லை..!
பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு நடைபெறும் தினங்களில் கொழும்பில் முக்கிய வீதிகள் மூடப்படும் என்று பரவியுள்ள வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் கூறினார்.
இம்மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் தகவல் சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டு நிகழ்வுகள் பற்றி அறிவுறுத்தும் கலந்துரையாடல் தகவல் ஊடக அமைச்சின் ஊடக அபிருத்தி நிலையத்தில் இன்று (01) காலை நடைபெற்றது.
இதற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே செயலாளர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இம்மாதம் 10 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையில் இலங்கையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 54 பொது நலவாய நாடுகளில் 53 நாடுகள் கலந்துகொள்கின்றன.
இம்மாநாட்டில் தகவல் சேகரிக்க உள்நாட்டிலிருந்து 500 ஊடகவியலாளர்களுக்கும் வெளி நாடுகளிலிருந்து 500 ஊடகவியலாளர்களுக்கும் சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.
மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் தினங்களில் கொழும்பின் பிரதான வீதிகள் மூடப்படவுள்ளதாக பரவியுள்ள வதந்தியில் எவ்வித உண்மையுமில்லை. எனினும் வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும் தருணங்களில் மட்டும் வீதிகளில் நெரிசல் ஏற்படலாம் என்றும் கூறினார்.
அரசாங்க தகவல் தணைக்களத்தின் பணிப்பாளர்கள் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல வரவேற்புரை நிகழ்த்தினார்.பணிப்பாளர் வசந்தபிரிய ராமநாயக்கவம் கலந்துகொண்டார். மாநாட்டின்போது தகவல் சேகரிப்பதில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் பற்றியும் அதற்கான மாற்றுவழிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
Post a Comment