கொழும்பில் முதலாவது யூனானி சர்வதேச மாநாடு
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கொழும்பு பல்கலைக்கழக உள்நாட்டு மருத்துவக்கல்வி நிறுவகம் ஏற்பாடு செய்துள்ள முதலாவது யூனானி, ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் மரபு வைத்தியம் தொடர்பான சர்வதேச மாநாடு எதிர்வரும் டிசம்பர் 19ஆம்திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள
இம்மாநாட்டில் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதோடு ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அத்துடன் கண்காட்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரபு வைத்திய சுகாதாரத்துறையை மேம்படுத்தும்நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாட்டில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் 0778822866/ 0718152485 எனும் கையடக்கத்தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள முடியும் அல்லது www.iimic2013.com எனும் இணையத்தளத்திலும் மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள முடியும் என இதன் ஏற்பாட்டுக்குழுத்தலைவர் வைத்திய கலாநிதி டாக்டர் பி.எம்.நஜிப் தெரிவித்தார்
Post a Comment