முஸ்லிம் பிரதேசங்களில் நடமாடுவோர் குறித்து அவதானம் தேவை..!
(MSM.பாயிஸ்)
வீடுகளுக்கு பொருட்களை விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவர்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
வோஷிங் பவுடர், கேக் பவுடர், சவர்க்காரம், உடுதுணிகள் என பல்வேறுபட்ட பொருட்களை வீடு வீடாக கொண்டு வந்து அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!
ஆண்கள் அதிகம் வீடுகளில் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகிறார்கள். பெண்களுடன் கவர்ச்சியாக பேசும் இவர்கள் தங்களின் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கத்தைவிட தீய நோக்கத்தோடுதான் அதிகம் பேர் வருகிறார்கள்.
காத்தான்குடியில் ஒரு வீட்டுக்கு வந்த ஒரு கேக் பவுடர் விற்பனைப் பிரதிநிதி அந்த வீட்டுத் தலைவியிடம் அந்த கேக் பவுடரை வாங்கும் படி மிகவும் வற்புறுத்தி இருக்கிறார், எங்கள் வீட்டில் என் கணவர் இந்தியாவில் இருந்து கொண்டுவந்த கேக் பவுடர் இருக்கிறது இது தேவை இல்லை என கூறியிருக்கிறார், அதற்கு அந்த நபர் அப்படியானால் இதன் செய் முறையை எனக்கு கூறுங்கள் பார்க்கலாம் என கூறினாராம். அப்பெண் கறாராக தேவையில்லை நீங்கள் போகலாம் என்று கூறியவுடன்தான் அவர் அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். இன்னொரு இடத்தில் சரியான தாகமாக இருக்கிறது தண்ணீர் கொடுக்க முடியுமா என ஒரு பெண்ணிடம் விற்பனைப் பிரதிநிதி கேட்டிருக்கிறார், அப்பெண்மணி தண்ணீரை கொடுத்ததும் அவர் கடும் சூடாக இருக்கிறது குளிர் தண்ணீர் இல்லையா? உங்கள் வீட்டில் குளிர் சாதனப்பெட்டி இல்லையா? என அதிபிரசங்கித் தனமாக கேட்க அந்த வீட்டு அம்மாவுக்கு கோபம் வந்து திட்டி அனுப்பியதாகவும் அறியக் கிடைக்கிறது. இவர்களின் நடவடிக்கை வீடு வீடாக பிச்சை எடுப்பதைவிடவும் கேவலமாக இருக்கிறது.
வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி கடைகள் தாராளமாக இருக்கும் போது இவர்களின் வருகை அவசியமற்றது. ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புக்கள்,நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பிரதேச, நகர சபைகள் இவர்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்!
இறைவன் எம்மையும் எம் குடும்பத்தாரையும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!
this matter to take action very important
ReplyDeleteஎன்ன பாயிஸ் நாநா உங்க வீட்டில் நடைபெற்ற அசம்பாவிதத்தை மறைத்து இப்படி எச்சரிக்கை செய்வதால் மட்டும் உங்கள் சமூகக்கடமை தீர்ந்திடுமா நீங்கள் நடைபெற்றதை தயங்காமல் கூறினால்தானே நடவடிக்கை எடுக்க முடியும் எத்தனை நாளைக்கி சகித்துகொண்டிருப்பீர்கள்
ReplyDeleteYahya Mohammed,
ReplyDeleteநீங்கள் எப்பொழுது பார்த்தாலும் குத்தல் குதர்க்கமாகவே கருத்து பதிகின்றீர்கள். இது ஆரோக்கியமானதல்ல. கட்டுரையில் உள்ள விடயங்களை ஆலோசனையாக எடுத்து, முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வதைனை விடுத்து, கட்டுரையாசிரியரை கிண்டல், நக்கல் பண்ணுவது நல்லதல்ல. நீங்கள் இப்படி செய்தால், இதுபோன்ற கட்டுரைகளை எழுத ஏனையவர்களும் தயங்குவார்கள், பாதிக்கப்படப் போவது நீங்கள் மட்டுமல்ல, மொத்த முஸ்லிம் சமூகமும் ஆகும்.
ரியாஸ் அஹமர் அவர்களே சுதந்திர நாட்டில் சுதந்திரமாக விட்பனை பிரதிநிதிகள் விட்பனை செய்வதில் ஈடுபடுவதை மட்டும் குதர்கமாகவும் குத்தலாகவும் எழுதுவது நியாயமா? உண்மையில் இப்படி விட்பனையில் ஈடுபடுபவர்களில் அதிகம் பேர் இதனை ஒரு துணை தொழிலாக செய்து வருமானத்தை ஈட்டி கலவி பயிலும் உயர் கல்வி மாணவர்கள் அவர்களுக்கு இவரது இந்த கட்டுரை எவ்வளவு வருத்ததை அளிக்கும் யோசிக்க மாட்டீர்களா? பெண்களை தனியே விட்டு விட்டு வெளிநாட்டில் வசிப்பது இவர்களின்ம் பேராசை இந்த நாட்டிலே நாலில் மூன்று பங்கு மக்கள் இந்த நாட்டில் தொழில் செய்துதானே வாழ்கின்றனர் ஏன் இவர்களால் மட்டும் நாட்டில் உழைத்து குழந்தை குட்டிகளுடன் சந்தோஷமாக வாழமுடியாது? பெண்கள் தனிமையில் வசித்தால் ஆயிரம் ஆபத்துகள் காத்திருக்கின்றன அதனை தவிர்க்க எல்லோரும் தங்கள் சுதந்திரமான நடவடிக்கைகள் அணைத்தையும் கைவிடவேண்டும் என்று எதிர்பார்பது எதார்தமானதா? இல்லை உரியவர் வந்து வீட்டில் இருந்து வீட்டு பெண்களை பாதுகாப்பது எதார்தமானதா? நான் உண்மையைதான் சொன்னேன் அசம்பாவிதம் நடைபெற்றதினாலேயே இப்படி ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது ஆனால் அசம்பாவிததை அசம்பாவிததிட்கு உட்பட்டோர் அதட்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது ஏனையோரை எச்சரிக்கின்றனர்
ReplyDeleteநாட்டில் இருக்கும் சுதந்திரத்திற்கு எதிராக கட்டுரையில் ஒன்றும் சொல்லப் பட வில்லையே?? விற்பனை பிரதிநிதிகளை அடித்து விரட்டுங்கள் என்றா அவர் சொன்னார்?
ReplyDeleteஇவ்வாறு வீடு வீடாக டை கட்டிக் கொண்டு வருபவர்களில் பலர், தம்மை உயர் கல்வி மாணவர்கள் என்று அறிமுகம் செய்தாலும், உண்மையில் அவர்கள் அப்படி அல்ல. குறித்த நிறுவனங்கள், மக்களை கவர, இவ்வாறான பொய்களை அவர்களுக்கு பயிடுவிக்கின்றன.
மேலும், அவர்கள் விற்கும் பொருட்கள், அவர்கள் சொல்லும் தரத்தில் இருப்பதில்லை. பொருள் வேண்டாம் என்று சொன்னாலும், இரண்டு நிமிடம் தாருங்கள், அது இது என்று போகாமல் தொல்லை தருகின்ற தன்மை இவர்களிடம் காணப் படுகின்றது.
கட்டுரையில் எந்த தப்பும் இருப்பதாக தெரியவில்லை.
பெண்களை தனியே விட்டு விட்டு யாரும் வெளிநாட்டில் வசிப்பதற்கு போவதில்லை, வருமானத்திற்கு வழி பார்க்க, தொழிலுக்காக போகின்றார்கள், இதனை குறை கூற முடியாது.
இந்த நாட்டின் உற்பத்தித் திறன் குயன்றியுள்ள நிலையில், ஏற்றுமதியை விட, இறக்குமதி பன்மடங்கு அதிகமாக உள்ள நிலையில், எல்லோருமே உள்நாட்டில் தொழில் செய்தல் வேண்டும் என்று எதிர்பார்த்தால், நாட்டுக்கு வருமானம் எங்கிருந்து வருவது??????
சிறிமா பண்டாரநாயக்க காலத்தில் போன்று வீட்டுத்தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு நாட்டி உண்ணுங்கள் என்று சொல்லவா முடியும்? காத்தான்குடியில் மரவள்ளிக் கிளங்கு நாட்ட போதிய இடம் எத்தனை வீடுகளில் உள்ளது?
பகலில் இந்த விற்பனைப் பிரதிநிதிகள் ஊருக்குள் வரும் பொழுது, வெளிநாட்டுக்கு போனவர்கள் மட்டுமல்ல, டவ்னில் கடை வைத்திருப்பவர்கள், அலுவலகங்களில் தொழில் புரிபவர்கள் கூட வீட்டில் இருப்பதில்லை.
ஆகவே நீங்கள் சொல்லுவது போன்று வீட்டில் இருந்துகொண்டு பெண்களை பாதுகாப்பது என்பது, எல்லோரும் முழு நேரமும் வீட்டில் இருந்துகொண்டு சுய கைத்தொளில்தான் செய்ய வேண்டும்.